பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முகவுரை

V

முகவுரை

எந்த மொழியின் வளர்ச்சிக்கும் அதன் உரைநடையிலக்கணம் இன்றியமையாத தென்பது, எல்லார்க்கும் தெரிந்ததே. பண்டைத் தமிழிலக்கியம் பெரும்பாலும் செய்யுள் செய்யுள் வடிவாயிருந்தமையின், பழந்தமிழிலக்கணங்கள் பெரும்பாலும் செய்யுட்கே இலக்கணம் கூறி வரலாயின. பல மொழியமைதிகளும் நெறிமுறைகளும் செய்யுட்கும் உரைநடைக்கும் பொதுவாயிருத்தலின், அப்பொதுவான பகுதியே பழந்தமிழிலக்கண நூல்களினின்று தற்காலத் தமிழ் உரைநடையிலக்கண நூல்கட்கு எடுத்துக் கொள்ளப்படுவதாயுள்ளது.

ஆங்கில உரைநடையிலக்கணம் மிக விரிவாகவும், நிறைவாகவும் வரையப்பட்டிருத்தலானும், ஆங்கில வுரைநடையைப் பின்பற்றியே தமிழ் உரைநடை வளர்க்கப்பட்டு வருதலானும், ரென்னும் மார்ட்டினும் (Wren and Martin) இணைந்தியற்றிய ஆங்கில விலக்கண நூலைத் தழுவியே சென்னை அரசியலார் தமிழ்க் கட்டுரையிலக்கணப் பாடத்திட்டம் வகுத்திருத்தலானும், அந்நூலைத் தழுவியே இந்நூலும் வரையப் பட்டுள்ளது.

எத்துணையோ வேறுபட்ட மொழிகளும் பல மொழியமைதிகளிலும் நெறிமுறைகளிலும் ஒத்திருத்தலானும், எத்துறையிலும் முற்கால நூல்களினும் பிற்கால நூல்கள் விரிவும் விளக்கமும் பெற்றிருக்கு மாதலானும், முன்னோர்க்கு இலைமறை காய்போல் மறைந்துகிடந்த இலக்கண அமைதிகள் பின்னோர்க்கு விளங்கித் தோன்றுமாதலானும், தொன்மொழியாகிய தமிழின் உரைநடைக்குப் பின்மொழியாகிய ஆங்கிலத்தின் உரைநடையிலக்கணத்தைத் தழுவி இலக்கணம் வரைவது, இயற்கைக்கு மாறானதன்று. எடுத்துக்காட்டாக, நிகழ்கால வினையெச்ச எழுவாயையும் (Noun-Infinitive) வாக்கியப் பாகுபாட்டையும் காண்க.

ஆங்கிலத்திற்கும் தமிழுக்கும் சில ஒற்றுமைகள் இருக்கும்போதே பல வேற்றுமைகளுமிருத்தலின், ஆங்கிலவிலக்கணத்திற் கூறப்பட்டுள்ள சில