பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

(5)

51

சிலர் பெருமையுள்ளவராகப் பிறக்கிறார்கள்; சிலர் பெருமையை அடைகிறார்கள்; சிலர்மேல் பெருமை சுமத்தப்படுகிறது.

(6) அடிக்கும் ஒரு கை, அரவணைக்கும் ஒருகை.

(7) ஐயர் வருமட்டும், அமாவாசை காத்திருக்குமா? (8) போனது போகட்டும்.

(9) இறைக்கிற கிணறு ஊறும், இறையாத கிணறு நாறும். (10) முக்காலும் காகம் முழுகிக் குளித்தாலும் கொக்காகுமா? (11) கையில் காசில்லை; கடன்கொடுப்பார் யாருமில்லை. (12) இளையான்குடிமாறநாயனார் வீட்டிற்கு நள்ளிரவில் ஒரு சிவனடியார் வந்துவிட்டார்; வீட்டில் ஒன்றுமில்லை; எல்லாரிடத்திலும் கடன்வாங்கி விட்டபடியால், கடன் கொடுப்பாரும் யாருமில்லை; யாரிடத்திலும் போய்க் கடன் கேட்கலாமென்றாலும், எல்லாரும் கதவடைத்து அயர்ந்து தூங்கிவிட்டார்கள்; சிவனடியாருக்கும் அமுது படைத்தாகவேண்டும்; அவரோ பசியுடன் வந்திருக் கின்றார்; வரவரப் பசி கடுகவுஞ் செய்கின்றது; சிவனடி யாரை விருந்தோம்புவதையே உயிர்நாடியாகக் கொண்ட நாயனார், இந் நிலையில் என்ன செய்வார்!

(13)

(14)

(15)

(16)

சாதலினுந் துன்பந்தருவது ஒன்றுமில்லை; அதுவும் ஈதல் சையாதவிடத்து இன்பந் தருவதாகும்; என்கிறார் வள்ளுவர்.

உண்மையைக் குறிக்கத் தமிழில் மூன்று சொற்கள் உள. அவை, உண்மை வாய்மை மெய்ம்மை என்பன.

உள்ளத்தைப்பற்றியது உண்மை; வாயைப்பற்றியது

வாய்மை; மெய்யைப்பற்றியது மெய்ம்மை. மெய் என்பது உடம்பு. (4 வாக்கியம்)

வடமொழி தேவமொழி என்னுங் கொள்கையினாலும், பிறப்பொடு தொடர்புண்ட குலப்பிரிவினாலும், தமிழுக்கு நேர்ந்த தீங்கு கொஞ்சநஞ்சமன்று.

கடல்கோளால் அழிந்த தமிழ்நூல்களினும், பதினெட்டாம் பெருக்கில் அழிந்த தமிழ்நூல்கள் கழிபல.

(17) ஏசுபெருமான் கடவுளை நோக்கி, தம்மைச் சிலுவையில் அறைந்தவரைக் குறித்து, "எந்தையே! இவர்களை