பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




60

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

எ-டு : ஒரு நல்ல தென்னாட்டுத் தமிழ்ப் பையன்

ஒரு சிறு நல்ல பெண்பிள்ளை.

இவற்றில், தெரிநிலைப் பெயரெச்சமின்மையே பிளவுபடா திசைத்தற்காரணம். இவற்றை அளவையாகக் கொண்டு குறிப்புப் பெயரெச்சங்கள் தொடர்ந்துவரும் முறை அறிக.

வாக்கியங்களிற் சொற்கள் அமைந்து கிடக்கும் முறை பலவகைப்படும். அவற்றுள், உரைநடைக்குரியன அல்லது மாணவர் கையாளத்தக்கன மூன்று. அவை, ஆற்றுநீர், நிரனிறை, அளைமறி பாம்பு என்பன.

ஒரே தொடர்ச்சியாய்ச் செல்லும் ஆற்றுநீர்போல், ஒரே தொடர்ச்சியாய்ப் பொருள் செல்லுமாறு சொற்கள் அமைந்து கிடக்கும் முறை, ஆற்றுநீர் ஆகும்.

எ-டு (1) நாங்கள் நால்வரும் நேற்று ஒரு காட்டுணா

(Picnic)விற்காகப் போனோம். காட்டிற்குப் போனவுடன் எங்கள் மூட்டை முடிச்சுகளை யெல்லாம் இறக்கி ஒரு மரத்தடியில் வைத்துவிட்டுச் சிறிதுநேரம் விளையாடிக் கொண்டிருந்தோம். திடுமென்று ஒரு புலிக்குரல் கேட்டது. நாங்கள் யாவரும் திகிலடைந்து மெல்ல நடந்து, பக்கத்திலுள்ள ஒரு புதரிற்போய்ப் பதுங்கிக்கொண் டோம். சிறிதுநேரத்திற்குள் புலி வந்துவிட்டது. அன்று எங்கள் உயிர் எங்களிடமில்லை. ஆனால், கடவுளருளால், அது எங்களைக் காணவே யில்லை; இரண்டொரு நொடிநேரம் நின்று அங்குமிங்கும் பார்த்துவிட்டு, எங்கள் அருகாகவே கடந்து போய்விட்டது. அது போகிற அரவம் அடங்கியபின், சில நிமையம் பொறுத்து, மெல்ல மரத்தடிக்குச் சென்று, முக்கியமானவும் எளிதாய்ச் சுமக்கக் கூடியனவுமான பொருள்களைமட்டும் எடுத்துக் கொண்டு, ஒரே ஓட்டமாய் ஓடிவந்துவிட்டோம். வீடுவந்து சேர்ந்தபின்தான் எங்கள் நெஞ்சாங்குலைத் துடிப்பு நின்றது.

(2) பிற நாடுகளிலெல்லாம் அரசியற்கட்சி பல விருப்பினும், நாட்டுமொழி அவை யெல்லாவற்றிற்கும் பொதுவாகும். இப் பாழாய்ப்போன தமிழ்நாட்டிலோ, ஒவ்வொரு கட்சியொடும் ஒவ்வொரு மொழி தொடர்புறுத்தப்படு கிறது. அதிலுங் கேடாக, நாட்டுமொழியே நாட்டவரால் வெறுக்கவும் படுகின்றது. மொழியல்லவா மக்கள்