பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




68

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

காலம் : 4ஆம் வே.-யும் 7ஆம் வே.-யும் வரும்.

எ-டு : வருகிற ஆவணிக்குக் கலியாணம்.

வருகிற ஆவணியிற் கலியாணம்.

குற்றங்கூறல் : 2ஆம் வே.-யும் 4ஆம் வே.-யும் 6ஆம் வே.-யும்

7ஆம் வே.-யும் வரும்.

எ-டு : நூலைக் குற்றங் கூறினான்.

நூலுக்குக் குற்றங் கூறினான்.

நூலது குற்றங் கூறினான்.

நூலின்கண் குற்றங் கூறினான்.

வேலை செய்தல் : 4ஆம் வே.-யும் 6ஆம் வே.-யும் வரும்.

எ-டு : முதலியாருக்கு வேலை செய்கிறான், ஆசிரியனுக்கு ஏவல் செய்கிறான்.

முதலியாரது வேலை செய்கிறான், ஆசிரியனது ஏவல் செய்கிறான்.

இப் பொருளில் 4ஆம் வேற்றுமையே பெருவழக்காம். வீண் செயல் : 4ஆம் வே-யும் 7ஆம் வே-யும் வரும்.

எ-டு : வீணுக்கு உழைக்கிறான்.

வீணில் உழைக்கிறான்.

வருத்தமும் மகிழ்ச்சியும் : 2ம் வே.-யும், 3ஆம் வே.-யும், 4ஆம் வே-யும் வரும்.

எ-டு : அதுபற்றி வருந்தினான், மகிழ்ந்தான்.

அதனால் வருந்தினான், மகிழ்ந்தான்.

அதற்கு வருந்தினான், மகிழ்ந்தான்.

3ஆம் வேற்றுமை 'ஒடு' உருபு சிறந்தவர்கள் பெயரொடு சேர்ந்துவரும்.

எ-டு: தந்தையொடு மக்கள் வந்தார், நம்பியொடு நாய் வந்தது.

இரு சாராரும் சமமானவராயின், 3ஆம் வேற்றுமையிற் கூறாது முதல்வேற்றுமையிற் கூறல்வேண்டும்.

எ-டு : முதலியாரும் செட்டியாரும் வந்தார்கள், நாயும் கழுதையும் வந்தன.

இருவரிடைப்பட்ட தொடர்பும் நட்பும் பகையும்பற்றிய கூற்று, பின்வருமாறு வேற்றுமை பெறும்: