பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

தகுசொல், இன்சொல், இணைமொழி, மரபுத்தொடர் மொழி, பழமொழி, அணிமொழி ஆகியவை நடையைச் சிறப்பிக்கும்.

வீழ்ந்த

தமிழ்ச்சொல்லின்

வழக்கிலிருப்பினும் இல்லாவிடினும், தமிழ்ச்சொல் லிருக்கும் போது அதற்குப் பதிலா-அயற்சொல்லை வழங்குதல் கூடாது. வழக்கு பொருளைத் தெரிவித்தற்பொருட்டு அதனையடுத்துப் பிறைக்கோட்டில் வழக்கூன்றிய அயற்சொல்லைக் குறித்தல் வேண்டும்.

(6) தெளிவும் துப்புரவும் (Legibility and Neatness)

கட்டுரை முழுதும் இருண்ட மையில் தெளிவாக எழுதப்பெறல் வேண்டும். விளங்காத அளவு கூட்டெழுத்தா யெழுதுதல் கூடாது. அடித்தடித் தெழுதாமல் ஒரே தடவையில் செவ்வையா- எழுதப் பழகிக்கொள்ளவேண்டும்.

எண்ணாமல் விரைந்தெழுதுவதினாலேயே பெரும்பாலும் அடித் தெழு நேர்கிறது. அடித்தெழுதுவதைச் சற்று எண்ணியெழுதி னால், முதன்முறையிலேயே திருத்தமா- எழுதிவிடலாம்.

எழுத்துவேகத்தைப் படிப்படியா-த்தான் மிகுத்தல் வேண்டும்.

(7) பொருத்தவீதம் (Proportion)

ஒவ்வொரு பொருட்பகுதியையும் கருத்தையும்பற்றி, அதற் குரிய அளவே எழுதுதல் வேண்டும். ஒரு கட்டுரையின் முகவுரையை விரித்தும் முக்கியப் பகுதியைச் சுருக்கியும்; அல்லது ஒரு பொருளின் நன்மை தீமையைப்பற்றி வரையும்போது, நன்மையைப்பற்றி விரித் தும் தீமைமையைப்பற்றிச் சுருக்கியும்; அல்லது ஒரு பொருளைப் பற்றிய பல கருத்துகளில், ஒன்றைப்பற்றி விரித்தும் பிறவற்றைப் பற்றிச் சுருக்கியும் வரைதல் கூடாது.

மாணவர் கட்டுரை காலத்தாலும் அளவாலும் வரம்புபட்டிருத்தலின், ஒரு பகுதியைச் சுருக்கின் மற்றொரு பகுதியை விரித்தே எழுத நேரும். இதனால் குன்றக்கூறல் மிகைபடக்கூறல் என்னும் குற்றங்கள் உண்டாம். ஆதலால் ஒவ்வொரு கருத்தின் அளவையும் உள்ளத்தில் நிலையிட்டுக் கொண்டு, அதன்பின் அதனைப்பற்றி அதற்குரிய அளவு வரைதல் வேண்டும்.