பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரையியல்

141

களும் அவற்றின் தீமையும். 13. வேலைநிறுத்தங்களின் நன்மையும் தீமையும். 14. வழிப்போக்கின் கல்விப்பயன். 15. உட்காட்டி (X-ray). 16. இயந்திர முளை. 17. இருப்புப்பாதையால் இந்தியாவில் நேர்ந் துள்ள சமுதாய மாறுதல்கள். 18. போரின் நன்மை தீமை. 19. அறிவு பெறும் வழிகள். 20. தனக்குழைக்கின்றவன் பிறனுக்கும் உழைக் கின்றான்.

4. சிந்தனைக் கட்டுரை

வெளியின் விரிவு

நாம் பொதுவா-, மேலுகம் நிலவுலகம் கீழுலகம் என உலகம் மூன்றே யென்றும்; அவற்றுள் அனைத்தும் அடக்கம் என்றும், சொல் கின்றோம். இங்ஙனஞ் சொல்லும்போது, மேலுலக கீழுலகங்களின் அளவையும், நிலவுலகத்தைச் சூழவுள்ள பக்கவுலகங்களின் உண்மை யையும்பற்றிச் சிறிதும் சிந்திப்பதே யில்லை. மேலேழும் கீழேழுமாக ஈரேழுலகங்கள் உண்டென்று கொள்ளினும், அவையும் மேற்கூறிய மூவுலகங்களுக்குள் அடக்கமேயன்றி வேறல்ல. இனி, மேலுலகத்தை விண்ணுலகம் (தேருலகம்) வீட்டுலகம் என ஈருலகங்களாகப் பகுப்பினும், அப் பகுப்பாலும் மேலுலக அளவை நாம் அறிவதில்லை.

நிலம் நீர் தீ வளி வெளி எனப் பூதம் ஐந்தென்றும், இவையே அனைத்தும் என்றும், ஏனைப் பூதங்கட்கெல்லாம் வெளியானது இ மாகுமென்றும், மெ-ப்பொருட் பாகுபாட்டிற் கொள்கின்றோம். இ பாகுபாட்டால், வெளியின் இயல்பை ஒருவாறுணர்கின்றோமே யன்றி, அதன் விரிவை உணர்வதில்லை.

பெறுபகி ரண்டம் பேதித்த அண்டம் எறிகட லேழின் மணலள வாக

என்று திருமூலரும்,

அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின் நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன இன்னுழை கதிரின் துன்னணுப் புரையச்

சிறிய வாகப் பெரியோன்

(திருவண்டப்பகுதி, 1-15)

என்று மாணிக்கவாசகரும் கூறியவற்றை நோக்கும்போது நம் வெளி

நோக்கு இன்னும் சற்று விரிவடைகின்றது; ஆயினும், நம் பொரு