பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

தேவருலகம் ஞாலத்தைச் சூழவுள்ள தென்று கொள்ள வேண்டும். ஆயின், நாம் அவ்வாறு கொள்வதில்லை. பொதுவாக மேலிடம் உயர்வையும் கீழிடம் தாழ்வையுங் குறிப்பதாக நாம் கொண்டு, மீத்திசையை வீட்டுத் திசையாகக் குறிக்கின்றோம். ஆனால், கடவுட்கு மேல் கீழென்னும் திசை வேறுபாடின்மையானும், பத்துத் திசைகளும் பொருளை நோக்கியும் இடத்திற்கேற்பவும் அவ்வப்போது உறவுநிலையிற் குறிக்கப்படுவதல்லது நிலையான இடமாகா மையானும், வெளியின் அளவானது உள்ளத்தாலும் உணரப்படாதபடி விரிவாயிருப்பதானும், மீத்திசையென்று ஒரு சக்கரத்திசையை நாம் குறிப்பதானும், தேவருலகம் அல்லது வீட்டுலகம் இன்ன திசையில் அல்லது இன்ன இடத்திலுள்ளதென்று உண்மையிற் குறிக்க முடியாதாம்.

வீட்டுலகிற்குக் கூறியது நரக வுலகிற்கும் ஒக்கும். சிலர் வீடும் நரகமும் உண்டென நம்புவதில்லை. சிலர் நரகத்தின் என்றுமுண்மை யை நம்புவதில்லை. அதாவது, அது இதுபோதில்லை யென்றும் எதிர் காலத்தில் உலக முடிவின்பின் ஏற்படும் என்றும் நம்புகின்றனர்.

ஆகவே, வெளியானது எண்ணுக் கெட்டாத விரிவுடைய தென் றும், மண்ணுலகம் போன்ற அண்டங்கள் மட்டற்ற கோடியென்றும், கதிரவக் குடும்பங்களும் கணக்கற்றிருக்கலா மென்றும், விண்ணுலக நரகங்களின் திசையும் இடமும் திட்ட வட்டமா-ச் சுட்டற்கியலா வென்றும், அறிந்து கொள்க.

இனி, வெளியானது விளக்க முடியாவாறு விரிவுபட்டிருப்பதால், அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்து எல்லா நம்பு மதங்கட்கும் பொதுவான இறைவனும், சித்தமதக் கொள்கைப்படி, ஊரும் பேரும் உருவும் அளவும் இல்லாதவ னென்றே பெறப்படும். ஆதலின், அவற்றை அவனுக்கு வேறுவேறு படைத்துக்கொண்டு போரிடுவது, குளிக்கப்போ-ச் சேற்றைப் பூசிக்கொள்வதையே ஒக்கும்.

பயிற்சி

பின்வருபவற்றைப்பற்றிச் சிந்தனைக் கட்டுரை வரைக:

1. போதுமென்ற மனமே பொன்செ-யும் மருந்து. 2. பழையன கழிதலும் புதியன புகுதலும். 3. வறுமை மாந்தன் அமைப்பே. 4. கோப முங் குணமாம். 5. நல்வாழ்க்கையே நற்சமயம். 6. பெருந்தகை யார்? 7. உரைநடைக்கும் செ-யுட்கும் உள்ள வேற்றுமை. 8. "பெருமையுஞ்