பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரையியல்

159

வற்றில் எத்துணைப் பெரியவராயினும், குடிகாரன் கண்ட விடத்தி லெல்லாம் அமர்ந்துகொள்கின்றான்; சில சமையங்களில், சிறந்த சித்தர் போலக் கள்ளிப் புதர்மேற்கூடக் கண்படை செ-கின்றான்; சிறுவர் குறும்பு செ-யினும் பகைவர் தீங்குபுரியினும், அவற்றைப் பொறுத்துக் கொள்கின்றான். இங்ஙனம் அவன் தாழ்மை, பொறுமை பொறை களாகவும் முதிர்ந்துவிடுகின்றது.

இத்தகைய நிலையில்

அவன் சான்றோ னாகிவிடுகின்றான். அதனால், அவனுக்கு வா-மை பிறந்து, உள்ளத்தில் உள்ளதை ஒளிக் காமல் பகைவருக்கும் சொல்லிவிடுகின்றான்.

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொ-யா விளக்கே விளக்கு

என்பது பொ-யாமொழி யன்றோ?

குடியினால் விளையும் பல பயன்களுள் வேதனை விலக்கும் ஒன்றாம். எவ்வகை உடல்வேதனையும் உளவேதனையும் குடிகார னுக்கு எள்ளளவும் இல்லாது போகின்றது. அவன் இன்பமே து-க்கும் தேவர்நிலையடை கின்றான். தன் கவலை குடும்பக்கவலை ஆகிய வற்றுள் ஒன்றும் அவனைத் தாக்காது விடுகின்றது. சான்றோன் நிலைக் கடுத்தது தேவர் நிலைதானே?

தனக்குவமை யில்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்ற லரிது

என்று வள்ளுவர் கூறியது அறியாமை பற்றியதே. அவர் கள்ளுண் ணாமையின், அதன் பயனை அறிந்திலர்.

தேவர்நிலை யடைந்தவுடன் குடியனுக்குப் புலமை தானாக வந்து விடுகின்றது. தேவரைப் புலவர் என்னும் பிங்கலம். உழைப்பாலும் வறுமையாலும் கவலையாலும் மங்கி மழுங்கிக்கிடந்த மதியானது, குடியினால் தீட்டப்பெற்றுக் கூராகின்றது. நரம்பு முறுக் கேறித் தசைநார் இறுகி மூளை வேகமா- வேலைசெ-யத் தொடங்கு கின்றது. கடன் மடை திறந்தாற்போலக் கடும் பாவெள்ளம் பெருக் கெடுத்தோடுகின்றது. குடியினால் எழுந்துள்ள பாக்கள் எத்தனை! பனுவல்கள் எத்தனை! இலக்கணம் எத்தனை! இலக்கியம் எத்தனை! மந்திரம் எத்தனை! மறைகள் எத்தனை! இங்ஙனம் இலக்கிய வளர்ச்சிக்கும் குடி காரணமா யிருப்பதை எவர் எண்ணுகின்றனர்?