பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 உயர்தரக் கட்டுரை இலக்கணம் என்று விடையிறுத்ததும், அவ் விருவரும் முறையே சீதை மீதும் இராமன் மீதும் கொண்ட கரைகடந்த பெருந்திணைக் காதலைக் கண்ணாடிபோல் எத்துணை விளக்கமாகக் காட்டுகின்றன! சூர்ப்பநகை இலக்குமணனால் மூக்கறுபட்டு வந்தவுடன், இரா வணன் தனக்கு நேர்ந்த பழியை நோக்கி வருந்திய வருத்தத்தை, அவன் நெஞ்சொடு கூறலாகக் கம்பர் பாடிய, புத்துற வுறப்பழி புகுந்ததென நாணித் தத்துறுவ தென்னைமன னேதளரல் அம்மா எத்துய ருனக்குள தினிப்பழி சுமக்க பத்துள தலைப்பகுதி தோள்கள்பல வன்றே (மாரீசன் வதைப்படலம், 61) என்னுஞ் செ-யுள், எத்துணை நுட்பமாக எடுத்துக் காட்டுகின்றது மண்ணினைக் காக்கின்ற மன்னன் மைந்தர்கள் கண்ணினைக் காக்கின்ற விமையிற் காத்தனர் (வேள்விப்படலம், 41) என; தம்பியாகிய இலக்குமணன் ஒரேயிடத்து நின்றும், தமையனாகிய இராமன் சுற்றிச்சுற்றி வந்து அடிக்கடி அவனைத் தட்டி விழிப்பூட்டி யும், விசுவாமித்திரனது வேள்வியைப் போற்றிக் காத்த நிலைக்கு; சிறிய கீழிமை இமையாது நின்றும், பெரிய மேலிமை அடிக்கடி யிமைத்து அதனொடு பொருந்தியும், கண்ணைப் போற்றிக் காக்கின்ற நிலையை உவமை கூறியதும், சொல்லு மத்தனை யளவையின் மணிமுடி துறந்தான் எல்லி மத்தெழு மதியமும் ஞாயிறும் இழந்த அல்லும் ஒத்தனன் பகலும் ஒத்தனன் என; முதல்நாள் இராமவிராவணப் போரில், இராமன் ஏவிய அம்பால் தாக்குண்டு மகுடங்களை யிழந்து நின்ற இராவணனுடைய விளக்க மற்ற பூதவுடலுக்குத் திங்களில்லா இரவையும், அழிந்து போன புகழுடலுக்கு ஞாயிறில்லாப் பகலையும் உவமித்ததும்; கம்பரின் உவமைத் திறத்தைக் கவினுறக் காட்டும். நினைந்தமுனி பகர்ந்தவெலாம் நெறியுன்னி அறிவனுந்தன் புனைந்தசடை முடிதுளக்கிப் போரேற்றின் முகம்பார்த்தான்