பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 24.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரையியல்

197

ஆகிய இருவருள், கண்ணகிக்குக் காதலிருந்தது; கோவலனுக் கில்லை. 'பெற்றமனம் பித்து, பிள்ளைமனங் கல்' என்னும் பழமொழி, பொதுவாகப் பெற்றோர்க்குப் பிள்ளைகளிடத்துக் காதலிருப்பதை யும், பிள்ளை கட்குப் பெற்றோரிடத்து அஃதில்லாமையும், தெரி விக்கும். நட்பாளர் இருவருள் ஒருவர் மெ-யன்பராயும் இன்னொரு வர் பொ- யன்பராயு மிருப்பதை, நாம் அடிக்கடி காண்கிறோம். இவ்வொரு தலைக் காதல் பெரும்பாலும் துன்பத்திற்கே ஏதுவாகும்.

மணத்தொடர்பு பற்றிய ஒருதலைக் காதல், ஐந்திணை யொரு தலைக் காதல் என்றும் பெருந்திணை யொருதலைக் காதல் என்றும், இருவகைப்படும். கோவலனும் கண்ணகியும் போலக் கூடிவாழ்வதற் கிசைந்தது ஐந்திணை யொருதலைக் காதல்; உதயகுமரன் மணி மேகலையைக் காதலித்தது போலவும், இரகுநாத சொக்கலிங்க நாயகரின் தேவி தாயுமானவரைக் காதலித்தது போலவும், இல்லத்திற் கிசையாத ஒருவரை இன்னொருவர் காதலிப்பது, பெருந்திணை யொரு தலைக் காதல் இவற்றுள், முன்னது இன்பமற்றதாயினும் நெறிப்பட்ட தாகும். பின்னது நெறி திறம்பியதோடு மனவேதனை யையும் சிலவி டத்து உயிர்க்கேட்டையும் விளைப்பதாகும்.

இருதலைக் காதல் இவ் வுலகத்திலிசையின், மேற்கூறிய மூவகைக் காதலரும் பேரின்பந் து-ப்பவரவாவர். இங்ஙனம் வா-ப்பது மிகவும் அருமை. பூதப் பாண்டியனும் அவன் தேவியும் மணக் காதலுக்கும் பிசிராந்தையாரும் அவர் குடும்பத்தாரும் உறவுக் காதலுக்கும், சீநக்கனும் பொ-யாமொழியாரும் நட்புக் காதலுக்கும் சிறந்த எடுத்துக் காட்டாவர்.

காதலுக்குக் காட்சியும் கலந்துறவாடலும் வேண்டிய தில்லை.

புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்

நட்பாங் கிழமை தரும்

என்றார் திருவள்ளுவர். கோப்பெருஞ் சோழனும் பிசிராந்தையாரும் ஒருவரையொருவர் கண்டறியாதவரா- இருநூறு கல் தொலைவி லிருந்து கொண்டே, ஒருவரை யொருவர் காதலித்தனர். இங்ஙனமே மணக் காதலரும் உறவுக்காதலரும், ஒருவரையொருவர் காணாமலே காதல் நிகழ்த்த முடியும். கலிப்பகையாரும் திலகவதியாரும் போலக் கரணத்திற்கு முன்னருங் காதலிக்கும் மணக்காதலரும், பிறப்பி னின்றே காணாமல்