பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

இயற்றமிழ் இலக்கணம்

முதலெழுத்துகள் நா, உதடு முதலிய வாயுறுப்புகளின் தொழிலி னால் வெவ்வேறெழுத்தா-ப் பிறக்கும் முறையாவன:

அ, ஆ, என்பவை வா- திறத்தலாலேயே பிறக்கும். உ,ஊ,ஒ,ஓ,ஔ என்பவை உதடு குவிவதால் பிறக்கும்.

மேல்வா-ப் பல்லும் கீழுதடும் பொருந்த வகரம் பிறக்கும்.

இங்ஙனமே பிறவும்.

3. சார்பெழுத்துகளின் பிறப்பு: சார்பெழுத்துகளில் ஆ-தத்திற்கு இடம் தலை, முயற்சி வா- திறந்தொலித்தல்; ஏனைய வெழுத்துகள் தத் தம் முதலெழுத்துக்களைப்போல் பிறக்கும்.

3. ஆ-தக் கிடம்தலை அங்கா முயற்சி சார்பெழுத் தேனவும் தம்முதல் அனைய.

உயிரளபெடை

(1560T. (5.87)

4. செ-யுளில் ஓசை குறைந்த விடத்து அதை நிறைத்தற்கு எழுத்து கள் தத்தம் அளவு கடந்தொலிக்கும். அஃது அளபெடை எனப்படும்.

-

அளபெடை அதிகமா- அளபெடுத்தல். அளபு மாத்திரை,

உயிர் அளபெடுப்பின் உயிரளபெடை யென்றும், ஒற்று (மெ-) அள பெடுப்பின் ஒற்றளபெடை யென்றுங் கூறப்படும்.

5. உயிரளபெடை: உயிரெழுத்துகளில் நெடிலேழும் அளபெடுக் கும். அவை அளபெடுத்தற் கடையாளமாக நெடிலுக்குரிய இரு மாத்திரை யிற் கூடிய ஒவ்வொரு மாத்திரைக்கும் ஒவ்வொரு முறையாக அவ்வந் நெடில்களின் இனக்குறில் கூட்டி யெழுதப்படும். ஐகாரத்திற்கு இகரமும், ஒளகாரத்திற்கு உகரமும் இனக்குறிலாகும். குறில்கள் அளபெடுப்பின், நெடிலாகியே அளபெடுக்கும்.

அளபெடை மொழி முதல், இடை, கடை என்னும் மூவிடத்தும் வரும். ஒளகாரம் மொழியிடை கடை என்னும் ஈரிடத்தும் வாராமையின், அவ் வீரிடத்தும் அளபெடுக்காது.

உ-ம்.

‘தூஉ-மை யென்ப தவாவின்மை' - மொழிமுதல்

'நற்றாள் தொழா அர் எனின்' - மொழியிடை

‘கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால்' - மொழிக்கடை

'கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வா-' - இதில் குறில் நெடிலாகி அளபெடுத்தது.