பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 25.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

திணை வழுவமைதி

இயற்றமிழ் இலக்கணம்

1. ஒரு பசுவை 'என் அம்மை வந்தாள்' என்பதில், உவப்பினால் அஃறிணை உயர்திணையாயிற்று.

2. நாலடியார் என்பதில், உயர்வினால் அஃறிணை உயர்திணையாயிற்று.

66

3." தம்பொரு ளென்பதம் மக்கள்" இதில், சிறப்பினால் உயர்திணை அஃறிணை யாயிற்று.

4.

'சுருக்கவிழ்ந்த முன்குடுமிச் சோழியா சோற்றுப் பொருக்குலர்ந்த வாயா புலையா - திருக்குடந்தைக் கோட்டானே நாயே குரங்கே யுனையொருத்தி

போட்டாளே வேலையற்றுப் போ-

-

"

இதில் செறலினால் உயர்திணை அஃறிணை யாயிற்று.

5. நான் தொண்டரடிப் பொடியாவேன் என்பதில், இழிவினால் உயர் திணை அஃறிணையாயிற்று.

பால் வழுவமைதி

1. தா- தன் மகனை ‘என் அம்மை வந்தாள்' என்பதில் உவப்பினால் ஆண்பால் பெண்பாலாயிற்று.

2. ஒருவனைப் பார்த்து அவர், அவர்கள் என்பதில், உயர்வினால் ஆண்பால் (ஒருமைப்பால்) பலர்பால் (பன்மைப்பால்) ஆயிற்று.

படும்.

இஃது உயர்வுப் பன்மை என்றும் மரியாதைப் பன்மை என்றும் கூறப்

3. 'தாயாகி தந்தையுமா-த் தாங்குகின்ற தெ-வம்'

இதில் சிறப்பினால் ஆண்பால் பெண்பாலாயிற்று.

4. 'எனைத்துணைய ராயினு மென்னாம் திணைத்துணையும் தேரான் பிறனில் புகல்'-

இதில் செறலினால் பலர்பால் (பன்மைப் பால்) ஆண்பால் (ஒருமைப் பால்) ஆயிற்று.

5. ஆண்மை யில்லாதானை நோக்கி, 'இவன் பெண்' என்பதில் இழி வினால் ஆண்பால் பெண்பாலாயிற்று.

25. உவப்பினும் உயர்வினும் சிறப்பினும் செறலினும்

இழப்பினும் பால்திணை இழுக்கினும் இயல்பே.

(நன்.சூ.379)