பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 26.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழ் நாகரிகம்

மாலுதல் மாண்புறுதல்.

127

"மான்ற பூண்முலையினாள்" (காஞ்சிப்பு. திருக்கண் 174). மால் பெருமை. மால் - (மாள்) மாண் - மாண்பு, மாட்சி - மாள் - மாளிகை - மாலிக்கா (வ.) = மாட்சிமைப்பட்ட மனை.

=

கோ. = அரசு, தலைமை. புரம் = உயர்வு, உயர்ந்த கட்டிடம்.

-

புரை = உயர்ச்சி. "புரைஉயர் பாகும்" (தொல்.உரி.4). வேந்தன் இருந்த உயர்ந்த எழுநிலைக் கட்டிடம் முதலிற் கோபுரம் எனப்பட்டது. பின்பு அதைப் போற் கோயிலில் அமந்த எழுநிலை வானளாவி அப்பெயர் பெற்றது. அதன் அமைப்பு தேரை ஒத்ததாகும்.

கோபுரம் உள்ள நகர்களின் பெயர்களே, முதலில் புரம் என்னும் ஈறு

பெற்றன.

எ-டு: காஞ்சிபுரம், கங்கைகொண்ட சோழபுரம்.

வேந்தன் தன் தலைநகரை நாற்புறமும்நோக்கவும், தொலை விற்பகைவர் வரவைக் காணவும், பகைவர் முற்றுகையிட்டு உழிஞைப் போரை நடத்துங்கதால் நொச்சிப் போரைக் கண் காணிக்கவும், அவன் அரண்மனையின் மேல் எழுநிலைகொண்ட ஓர் உயர்ந்த தேர் போன்ற கட்டிடம் கட்டப்பட்டிருந்தது. அது புரம், எனப்பட்டது. புரம் = உயர்ந்த கட்டிடமான மேன்மாடம். புரவி = உயர்ந்த சுவரைத் தாண்டும் குதிரை.

புரம் என்பது, பின்பு புரத்தைக் கொண்ட அரண்மனையையும் அதன் சூழலையும் (Acropolis) குறித்து, அதன் பின், நகர் என்னும் சொற்போல் தலைநகர் முழுவதையும் குறித்து, நாளடைவில் நகரப் பொதுப் பெயராயிற்று.

அரண்மனையிலுள்ள புரம் அரசன் இருக்கையாதலால், கோபுரம் எனப்பட்டது. கோ அரசன். கோ இருந்த இல் கோயில் எனப்பட்டதை நோக்குக.

,

பகைவர் வரவு காண்டற்குக் கோபுரம் சிறந்த அமைப்பென்று கண்டபின், நகரைச் சூழ்ந்த கோட்டை மதிலிலும், வாயிலிற் பெரிதாகவும் மற்ற இடங்களிற் சிறியனவாகவும் கோபுரங்கள் கட்டப்பட்டன. சிறியன கொத்தளம் எனப்பட்டன.

மதுரை நகரைச் சூழ்ந்த மதிலின் நாற்புறத்திலும், வாயிலும் மாடமும் வானளாவிய கோபுரமும் இருந்தன. நான்கு வாயில் மாடங்கள் இருந்த தினால், மதுரை நான்மாடக் கூடல் எனப்பட்டது. கூடல் என்பது தமிழ்க் கழகம். அது பின்பு இடவனாகு பெயராய் மதுரையைக் குறித்தது. இதையறியாது,