பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அறமுங் கொடையும்

93

கொடைமடம்: பண்டையரசருட் பலர்க்குக் கொடை ஒரு சிறந்த குணமாயிருந்தபோதே, ஒருவகையிற் குற்றமாகவும் இருந்தது. அது கொடைமடம் எனப்பட்டது.

பேகன் ஓர் அருவினை யுயர்விலைக் கலிங்கத்தை ஒரு மயில்மேற் போர்த்தான். பாரி தன் இழையணி நெடுந்தேரை ஒரு முல்லைக்கொடி படர நிறுத்தியதொடு, தனக்கிருந்த முந்நூறூர் களையும் பரிசிலர்க்கீந்து விட்டான். இமயவரம்பன் நெடுஞ்சேர லாதன், தன்மேற் பத்துப்பாட்டுப் பாடிய குமட்டூர்க் கண்ண னார்க்கு, ஐந்நூறூர் பிரமதாயமும் முப்பத்தெட்டியாண்டு தென்னாட்டுள் வருவதனிற் பாகமுங் கொடுத்தான். களங்காய்க் கண்ணி நார்முடிச்ே சரல், காப்பியாற்றுக் காப்பியனார்க்கு, பத்துப்பாட்டிற்கு நாற்பதிலக்கம் பொன்னும் தான் ஆண்டதிற் பாகமுங் கொடுத்தான். இங்ஙனம், அஃறிணை யுயிரிகட்குத் தகாத பொருள்களையும், அரசு கடும்படி பரிசிலர்க்கு நாடு முழுவதை யும், பல புலவர் பசியால் வாட ஓரிரு புலவர்க்கு மாபெருஞ் செல்வத் தையும் அளித்தது கொடைமடமாம்.