பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




132

பழந்தமிழாட்சி

2.மொழி நிலைமை

முதற்காலத்தில், தமிழ் எல்லாத் துறைகளிலும் தனியாட்சி செலுத்தி முழுத்தூய்மையாய் வழங்கி வந்தது. ஆயின், இடைக் காலத்தில் வடமொழி 'தேவபாடை' என்று மூவேந்தராலும் ஒப்புக் கொள்ளப்பட்டதினால் புரோகிதர் நடத்தும் பூசை கரணங்கட் கெல்லாம் தமிழ் விலக்கப்பட்டது. வடசொல் வழங்குவது உயர்வு என்னுங் கருத்தும் நாளடைவில் எழுந்தது. தமிழரசரும் ஒருசில தமிழ்ப்புலவரும் தமிழைப் புறக்கணிக்கவுந் தலைப்பட்டனர்.

தொன்றுதொட்டுத் தமிழ்ச்சங்கம் இரீஇத் தமிழை வளர்த்துத் தமிழ்நாடன் என்று சிறப்பிக்கப் பெற்ற பாண்டியன் குடியினரே, கி.பி. 3ஆம் நூற்றாண்டில் சங்கத்தைக் குலைத்துவிட்டனர். அதன் பின், 11ஆம் நூற்றாண்டில் அதைப் புதுப்பிக்குமாறு பொய்யா மொழிப் புலவர் செய்த பெருமுயற்சியும் வீணாய்ப்போயிற்று.

வடசொற்கள் தொல்காப்பியர் காலத்திலேயே, தமிழில் இடம்பெறத் தொடங்கிவிட்டன. ஆயின், அவர் காலத்தில் தற்பவ மாகவும் சிதைவாகவும் ஒரோவொன்றாய் அருகியே வழங்கின. பிற்காலத்திலோ, அவை படிப்படியாய்ப் பெருகி வந்ததுடன், கடைச் சங்கத்திற்குப் பிற்பட்ட காலத்தில், பொதுமக்கட் கென்றேற்பட்ட கல்வெட்டுகளில் தற்சமமாகவும் கிரந்தவெழுத்தி லும் தோன்றி, கல்வெட்டுத் தமிழையே தமிழர்க்கு விளங்காததும் பிழை மலிந்ததுமான மணிப்பவழக் கலவை மொழிவழியாக மாற்றிவிட்டன. அரசர் பெயர்' தெய்வப் பெயர் இடப்பெயர் முதலிய பல்வகைப் பெயர்களும் நாளடைவில் வடசொற்களாய் மாறின.

எடுத்துக்காட்டு: முற்காலச்சொல்

பாண்டியவரசர் பெயர்: காய்சினவழுதி, கடுங்கோன், வெண்டேர்ச் செழியன்,

முடத்திருமாறன்.

பிற்காலச்சொல் ஐயந்த வர்மன், ஜடில பராந்தகன், ராஜசிம்மன்

ஜடாவர்மன் (பராக்கிரம பாண்டியன்)

1. "அரசர்களும் அவர்களைச் சார்ந்த உறவினரும் அகத்தில் ஒற்றி, காரி கிள்ளி இருக்குவேள் என்பன போன்ற பழந்தமிழ்ப் பெயர் தரித்திருத்தல் வழக்கம். ஆயின், உத்தியோகமுறைமையில் பராந்தகன் இராஜராஜன் இராஜாதித்தன் என்னும் வடமொழிப் பெயர்களைத் தரிப்பார்கள்"- சோ.பக். 71.