பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 28.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




26

திரவிடத் தாய்

இவ் வடசொற் பொறாமை படித்த தமிழர் மனத்தில் முற்றிலும் பதிந்துள்ளது. மிக வொதுங்கியுள்ள நாட்டுப்புறங்களில் வாழும் நனி தாழ்ந்தோர் மொழி வடசொற்களை விலக்குந் திறத்தில் பேரளவு இலக்கிய மொழியை ஒத்திருக்கின்றது.”

66

(6ng. CNJ - 11. 49)

'தமிழ் தன்னிடத்துக் கொண்டுள்ள வடசொற்களிற் பெரும்பாலனவற்றை அல்லது அவையெல்லாவற்றையும் உடனே நீக்கமுடியும். அங்ஙனம் நீக்குவதனால் அது நடை உயர்ந்து மிகத் தூய்மையும் நேர்த்தியுமடைகிறது.'

தமிழின் இலக்கியப் பண்படுத்தத்தின் மிகுதொன்மை

(Ong. Ong - 11.50)

i. “பிற திரவிட மொழிகளின் இலக்கிய நடை அவற்றின் உலக நடையினின்று வேறுபட்டிருப்பதைவிடத் தமிழின் இலக்கிய நடை அதன் உலக நடையினின்று வேறுபட்டுள்ளது.'

""

ii. “தமிழின் அளவிறந்த சொல்வளமும் செந்தமிழிலக்கண வடிவுகளின் தொகைவகைகளும் மற்றொரு சான்றாகும். செந்தமிழிலக்கணம் வழக்கறிந்த வடிவங்களும் விலக்கப்பட்ட விகுதிகளும் வியப்பான வழுவமைதிகளும் செறிந்துள்ள பொருட்களம்....தமிழின் அளவிறந்த சொல்வளத்தை யாழ்ப்பாணத்து விடையூழியர் (Missionaries) வெளியிட்டுள்ள ஒரு பள்ளித் தமிழகராதி 58,500 சொற்களைக் கொண்டுள்ளமையே காட்டிவிடும். இன்னம் அவற்றோடு, அவ் வகராதியை நிறைவாக்க, பல்லாயிரங் குறியீடுகளையும் திசைச்சொற்களையும் ஆயிரக்கணக்கான புணர்ச்சொற்களையும் சேர்க்க வேண்டியதிருக்கும்.'

பிற திரவிட மொழிகளின் அகராதிகளை ஆயும்போது, அவை தமிழகராதிகளிலுள்ள ஒருபொருட் பலசொற் பட்டிகளைக் காட்டாமை ஒரு படிப்பாளியின் மனத்தில் மிகத் தெளிவாய்ப் படும். தமிழில்மட்டும் வழங்குகிற அளவில் தமிழுக்குரியவையென்று கருதப்படும் சொற்களை மட்டுமல்ல, தெலுங்கு கன்னடம் முதலிய மொழிகட்குரிய சொற்களையும் தமிழ் கொண்டுள்ளது. இங்ஙனம், இயல்பான தமிழில் உறைவிடத்திற்குரிய சொல் வீடு என்பது.