பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 29.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

தமிழர் மதம்

கஞ்சம் மாவட்ட மலையேயென்று, சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகரமுதலி தன் இயல்பிற்கேற்பக் குறித்துள்ளது.

2. தமிழ்நாட்டுச் சிவமடங்கள்

இன்று எல்லாத் துறையிலும் ஆரியத்தைப் போற்றிவருவன, தமிழ்நாட்டுச் சிவமடங்களே. இவற்றுள் குன்றக்குடி மடம் ஒன்றே விலக்காகும்.

மடத் தலைவரான தம்பிரான்மாரும் அவர் மாணவராகிய குட்டித் தம்பிரான்மாரும், துறவியர் எனச் சொல்லப்படுகின்றனர். ஆயின், தமிழத் துறவுமுறைக் கேற்ற நிலைமைகள் அவர் மடங் களில் இல்லை. நால்வகை வெள்ளாளரே தம்பிரான்மாராதற் குரியவர் என்பதும், உண்டிவகையிற் பிராமணர்க்குத் தனிச் சிறப்பும், மொழித்துறையிற் சமற்கிருதத்திற்கே முதலிடங் கொடுத்தலும், கோவிற் பூசகர் பதவிக்குப் பிராமணரையே பயிற்றுவதும், திருக் கோவில் வழிபாட்டில் வேத மந்திரங்களை ஓதுவிப்பதும், முற்றும் ஆரியச் சார்பான பழக்க வழக்கங்களாம்.

அணிகளை யணிவதும் உருவ வணக்கஞ் செய்வதும், உயரிய துறவுநிலைக் குரியவை யல்ல.

'மனத்துக்கண் மாசில னாத லனைத்தறன்

ஆகுல நீர பிற."

"மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்கல்

உற்றார்க் குடம்பு மிகை.

(குறள்.34)

(குறள்.345)

"சொல்லிலுஞ் சொல்லின் முடிவிலும் வேதச் சுருதியிலும் அல்லிலும் மாசற்ற ஆகாயந் தன்னிலும் ஆய்ந்துகிட்டோர் இல்லிலும் அன்ப ரிடத்திலும் ஈச னிருக்குமிடம் கல்லிழுஞ் செம்பிலு மோவிருப் பான்எங்கள் கண்ணுதலே. (பட்டினத்தார் பாடல்)

""

‘வேதச் சுருதி' என்றது, நீண்ட கால ஆரிய விளம்பரத்தினால் அடிப்பட்ட வழக்குப் பற்றியது.

இல்லறத்தாரான அடியார் நிலைமை வேறு; துறவுபூண்ட அறிவர் நிலைமை வேறு.

திருவாவடுதுறை மடம்

ஆங்கிலராட்சியும் ஆங்கிலக் கல்வியும் மொழியாராய்ச்சியும் ஏற்படாத காலத்தில், "இருமொழியும் நிகரென்னும் இதற்கையம்