பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 29.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

"மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார்.

66

99

""

உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன் உடம்பினுக் குள்ளே யுறுபொருள் கண்டேன் உடம்புளே யுத்தமன் கோயில்கொண் டானென் றுடம்பினை யானிருந் தோம்புகின் றேனே.' "படமாடக் கோயில் பகவற்கொன் றீயில் நடமாடக் கோயில் நம்பர்க்கங் காகா நடமாடக் கோயில் நம்பர்க்கொன் றீயில் படமாடக் கோயில் பகவற்க தாமே.

""

தமிழர் மதம்

(குறள்.3)

திருமந்.705)

(திருமந். 1821)

மதத்தை யொழித்துவிட்டாற் பிராமணியம் அடியோடொ ழியு மென்று கருதி, கடவுளில்லை யென்று சிலர் சொல்லிவருகின்ற னர். உருவ வணக்கத்தை ஒழித்துவிட்டாலே பிராமணியம் ஒழிந்து போமென்று உறுதியாய்ச் சொல்லலாம்.

தமிழ்நாட்டில் உருவிலா வழிபாடு பதினெண் சித்தர் காலத் தில் தோன்றியதென்றும், கிறித்துவிற்குப் பிற்பட்டதென்றும், தவ றாகக் கருதப்படுகின்றது. உலகில் முதன்முதல் கடவுளை உணர்ந் தவர் தமிழறிவரே. கடவுள் என்னும் சொல், குமரிநாட்டில் தலைக் கழகக் காலத்திலேயே தோன்றியதாகும். "முந்துநூல் கண்டு முறைப் பட எண்ணிப்" புலந்தொகுக்கப்பட்ட தொல்காப்பியத்தில், கடவுள் என்னுஞ் சொல் ஆளப்பட்டிருத்தல் காண்க.

ஆரியர் வந்தபின், கடவுட் சமயம் மறைக்கப்பட்டது; கடவுள் என்னும் சொல்லின் பொருளும் குறைக்கப்பட்டது.

5. இந்துமதம் என்னாது தென்மதம் எனல்

(1) இந்து என்பது வடநாடுகளுள் ஒன்றின் பெயரான சிந்து என்பதன் திரிபு. சிந்து = ஓர் ஆறு, அது பாயும் நாடு. சிந்து என்னும் பெயர் பாரசீகத்தில் ஹிந்து எனத் திரிந்தது. பிற்காலத்தில் அதினின்று இந்தியா என்னும் பெயர் கிரேக்கத்தில் தோன்றிற்று. வேத ஆரியர் முதன் முதல் சிந்து வெளியில் தங்கியிருந் ததனால், ஹிந்து என்பது நாளடைவில் நாவலந் தேயம் முழுமைக்கும் பெயராயிற்று. ஆரியர் தம் வேள்வி மதத்தொடு தமிழ மதங்களையும் இணைத்து, அக் கலவையைத் தமெதென்று காட்டி, இந்தியா முழுதும் பரவி இந் தியர் எல்லாரும் அக் கலவை மதத்தைத் தழுவும்படி செய்து விட்டதனால், ஹிந்து என்னும் தேசப் பெயர், அத் தேச மக்க ளையும் அம் மக்கள் மதத்தையும் குறிக்கலாயிற்று. அது தமி ழில் இந்து எனத் திரிந்தது.