பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 29.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிபுரையியல்

129

சில தென்சொற்கள் மேலையாரிய வழியாகத் திரிந்து, நம்பமுடியா அளவு சமற்கிருதத்தில் முற்றும் வடிவு மாறியுள்ளன.

எ-டு: காண் - Teut. kun, ken, con, cun, can, know, L. gno, Gk. gno, jna. (ஜ்ஞா). காட்சி (அறிவு) = ஜ்ஞான.

Skt.

சில தென்சொற்களைச் சமற்கிருதத்தில் மொழிபெயர்த்து அமைத்துள்ளனர்.

எ-டு : விலங்கு - த்ரியச், அங்குற்றை - தத்ரபவத்.

சமற்கிருதம் இலக்கிய மொழியும் செயற்கை மொழியுமாத லால், பல பொருள்கட்கும் பொருட் பாகுபாடுகட்கும் விருப்பம் போல் இடுகுறிச் சொற்களைப் படைத்துள்ளனர்.

எ-டு : எழுமுகில் (ஸப்த மேகம்) : சம்வர்த்தம், ஆவர்த்தம், புட்கலா வர்த்தம், சங்காரித்தம், துரோணம், காளமுகி, நீலவர்ணம் என்பன.

சங்கராபரணம், நாதநாமக்கிரியை முதலிய நூற்றுக்கணக் கான பண்ணுப் பெயர்களும் இடுகுறிச் சொற்களே.

கல்லால மர நீழலிற் சிவபெருமானிடம் பாடங்கேட்ட ஆரிய முனிவர் பெயராகச் சொல்லப்படும் சனகர், சனந்தனர், சனாதரர், சனற் குமாரர் என்பனவும் இத்தகையனவே.

இங்ஙனம், சமற்கிருதத்தில் ஐந்தி லிருபகுதி முழுத் தமிழ்ச் சொல்; ஐந்திலிருபகுதி தமிழ் வேரினின்று திரிந்த திரிசொல்; ஐந்தி லொரு பகுதி இடுகுறிச்சொல்.

பெரும் பேராசிரியர் உ.வே. சாமிநாதையர், தாம் வரைந்த குறுந்தொகை யுரையுள், நூலாராய்ச்சி என்னும் தலைப்பின்கீழ், 44 சொற்களை வடசொல்லைக் காட்டி, 'முதலியன' என்னுஞ் சொல்லால் முடித்து, "இவற்றிற் சிலவற்றைத் தமிழெனவே கொள் வாரும் உளர்" என்று எழுதியிருக்கின்றார்.

அவற்றுள் அகல், அமயம், அமிழ்தம், அரசன், அவை, ஆரியர், உலகம், ஏமம், கடிகை, கலாவம், காமம், காலம், குணன், குவளை, சகடம், சூலி, சேமம், சேரி, தண்டு, தாது, தூது, தெய்வம், நகர், நீலம், பக்கம், பணிலம், பருவம், பவழம், மண்டிலம், மணி, மதம், மதி, மாலை, முகம், முத்து, முரசு, யாமம் என்னும் முப்பத்தேழும் தென் சொல்லாம்.

சாமிநாதையர்க்குத் தமிழ் தவிர வேறொரு மொழியும் தெரியாது. அவர் தமிழாலேயே வளர்ந்து தமிழாலேயே வாழ்ந்தவர். ஆயினும், பிறப்பிலேயே அமைந்த ஆரிய நச்சுத்தன்மை அவரை