பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 29.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

தமிழர் மதம் ஆரணியகம்(ஆரண்யக). துறவு(சந்நியாஸ) நிலையிற் பிராமண னுக்குப் பயன்படும் மெய்ப்பொருள் நூல்கள் உபநிடதம் (உபநிஷத்).

=

உபநிஷத் = உடன் கீழிருக்கை. உப = உடன், நி = கீழ், ஸத் (sad) இருத்தல். ஆசிரியன் அடியருகிருந்து அவன் நுவற்சியைக் கேட்டல் என்பதே விளக்கப் பொருள். பரம்பொரு ளறிவால் அறியாமையை ஓய்ந் திருக்கச் செய்கை என்பர் வடமொழியாளர். "நன்கு அழித்தற்கு ஸாதனம்" என்பர் பர். (P.S.) சுப்பிரமணிய சாத்திரியார்.

வேதத் தெய்வியம் பல்தெய்வியமே (Polytheism). பல்லொரு தெய்வியம் (Homotheism) என்று மாக்கசு முல்லரும், ஒருதெய்வியம் (Monotheism) என்று மாகடானெலும் (MacDonell) கூறியது தவறாம். ஆரியர் பரம்பொருளறிவைத் தமிழரிடமே பெற்றனர். பல்சிறு தெய்வ வேள்வி மதத்திற்கும் பரம்பொருட் சமய மதத்திற்கும் மடுவிற்கும் மலை முடிக்கும் உள்ள தொலைவே.

Skt. sad.

ஸத் என்னும் சொல்லும் தென்சொல் திரிபே.

குத்து - குந்து. L. sid, sed, AS. sitt, E. siit, Goth. sit, ON. siti, OHG. sizz,

கி. பி. 5ஆம் நூற்றாண்டிற்குப் பின், கோவிலமைப்பு, படிமை யமைப்பு, வழிபடுமுறை, பூசகன் தகுதி, கொண்முடிபு முதலிய வற்றைக் கூறும் தொழுமறைகள் தோன்றின. அவற்றுள், சிவனியத் திற்குரியவை தோன்றியம் (ஆகமம்) என்றும், மாலியத்திற் குரியவை தொகுப்பியம்(ஸம்ஹிதை) என்றும், காளியத்திற்கு(சாக்தத்திற்கு) உரியவை பாவகம்(தந்திரம்) என்றும் பெயர் பெறும்.

இந்திய ஆரிய வளர்ச்சியின் ஐந்நிலைகள்

(1)

(2)

வடுகம்(தெலுங்கு)

வடதிரவிடம் (பிராகிருதம்)

(3) மேலை யாரியம்(தியூத்தானியம், இலத்தீனம், கிரேக்கம்)

(4) வேதமொழி

(5) சமற்கிருதம்

இந்திய ஆரியத்தில் தென்சொற்கள் கலந்த முக்காலம்

(1)

வடதிரவிடக் காலம்

(2) வேதமொழிக் காலம்

(3) சமற்கிருதக் காலம்