பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 3.pdf/112

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

102

திருக்குறள்

தமிழ் மரபுரை


(இ-ரை.) பழையார்கண் பண்பின் தலைப்பிரியாதார் - பழைமையான நண்பர் தவறு செ-தாராயினும் அவரிடத்துத் தம் நட்புத் தன்மையினின்றும் மாறுபடாதவர்; விழையார் விழையப்படுப - பகைவராலும் விரும்பப்படுவர்.

பண்பாவது நட்பிற் பிழைபொறுத்தல். மூன்றாம் வேற்றுமையுருபும் எச்சவும்மையும் தொக்கன.

அதி. 82 - தீ நட்பு

அதாவது, பொறுக்கப்படாத குற்றமுள்ளதாயும் எப்போதும் தீமையே செ-வதாயுமுள்ள தீயோர் நட்பு. நட்பாரா-தலில் 'பேதையார் கேண்மை' என்றும், அல்லற்க ணாற்றறுப்பார் நட்பு என்றும், 'கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை' என்றும், 'ஒப்பிலார் நட்பு' என்றும், பொதுப்படவும் சுருக்கமாகவுஞ் சொல்லிய தீநட்பைச் சிறப்பாகவும் விரிவாகவும் விளக்கமாகவுங் கூறவேண்டியிருத்தலின், இது பொறுக்கப்படும் குற்றமுள்ள பழைமையின் பின் வைக்கப்பட்டது.

811. பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்ற லினிது.

(இ-ரை.) பருகுவார் போலினும் - காதல் மிகுதியால் விழுங்கிவிடு வார்போல் தோன்றினும்; பண்பு இலார் கேண்மை - நற்குணமில்லார் நட்பு; பெருகலின் குன்றல் இனிது - வளர்தலினுந் தே-ந்துபோதல் நல்லது.

குன்றல் - வரவரச் சுருங்கி இறுதியிற் சிறிதும் இல்லாமற் போதல். தீயார் நட்பு வளர்தலும் தே-தலும், தீமை வளர்தலுந் தே-தலும் போன்றே யென்பது கருத்து. உம்மை உயர்வுசிறப்பு.

பருகுவார் போலுதல் என்னும் திருக்குறள் வழக்காறு, பிற்காலத்துப் புலவரால் வழிவழி ஆளப்பட்டு வந்துள்ளது.

"பருகு வன்ன காத லுள்ளமொடு"

(அகம்.369)


"பருகு வன்ன வேட்கை"

(புறம்.207)


"பருகு வன்ன வருகா நோக்கமொடு"

(பொருந.77)


"பருகு வன்ன நோக்மொடு"

(பெருங்.37:80)


"பருகிய நோக்கெனும்"

(கம்பரா. 1.11:37)


"பருகுவ னன்ன வார்வத்த னாகி

(நன்.பொதுப்.40)