பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 3.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டன. குற்றம் இவ் வதிகாரத்துள்ளும் பிறவற்றுள்ளுஞ் சொல்லப்பட்டன. குணம் என்னும் பொதுப்பெயர் ஆட்சியும் வழக்கும்பற்றி நற்குணத்தைக் குறித்தது. துணை சுற்றமும் நட்பும் படையுங் குடியும். ஒருவனது எளிமையும் துணையின்மையும் அவன் பகைவனுக்கு வலிமையாதலின் 'ஏமாப் புடைத்து' என்றார். 'ஆ-' என்னும் வினையெச்சம் தொக்குநின்ற 'உள்ள' என்னும் குறிப்புப் பெயரெச்சங்கொண்டு முடிந்தது.

869. செறுவார்க்குச் சேணிகவா வின்ப மறிவிலா வஞ்சும் பகைவர்ப் பெறின்.

(இ-ரை.) அறிவு இலா அஞ்சும் பகைவர்ப் பெறின் - அரசியல் அறிவில்லாத அஞ்சும் பகைவரைப் பெற்றால்; செறுவார்க்கு இன்பம் சேண் இகவா - அவரை வெறுத்துப் பொருவார்க்கு வெற்றியின்பங்கள் தொலை வில் நீங்கி நில்லா.

ஆம்புடை யறிதலும் அறிந்தாற் செ-து முடிக்கும் மனத்திண்மையுங் ஒருங்கேயில்லாத பகைவரைப் பெறுதல் அரிதாதலின் 'பெறின்' என்றும். அவரைத் செறுவார்க்கு வெற்றி நெருங்கி நிற்றலின் 'சேணிகவா' என்றும் கூறினார். பரிமேலழகர் சேணின்பம் எனக் கூட்டி 'உயர்ந்த இன்பங்கள்' எனப் பொருளுரைப்பர். அதுவும் பொருந்துவதே. ஆயின், ஆசிரியர் கருத்ததுவாயின் செறுவார்க்கும் சேணின்பம் நீங்கா என்று யாத்திருக்கலாம். 'அறிவிலா அஞ்சும்' பெயரெச்ச வடுக்கு. 'இன்பம்' பால்பகா வஃறிணைப் பெயர். வெற்றி பொருட்பேறு, வலிமிகை, பாடாண் புகழ் முதலியன பல்வேறு இன்பங்களாம்.

870. கல்லான் வெகுளுஞ் சிறுபொரு ளெஞ்ஞான்று மொல்லானை யொல்லா தொளி.

(இ-ரை.) கல்லான் வெகுளும் சிறு பொருள் ஒல்லானை - அரசியல் நூல் அறியாதவனைப் பகைத்தலால் வரும் எளியவழிப் பொருளொடு பொருந்தாதவனை; எஞ்ஞான்றும் ஒளி ஒல்லாது - ஒருபோதும் புகழ் பொருந்தாது.

'சிறுபொருள்' சிறுமுயற்சியால் வரும் பொருள். சிறு முயற்சியே செ-ய மாட்டாதவன் ஒருகாலும் பெருமுயற்சி மேற்கொள்ளானாகலின் 'எஞ்ஞான்றும்... ஒல்லா தொளி' என்றார். ஒளி என்பது வாழ்நாட் காலத்து இசை.