130
திருக்குறள்
தமிழ் மரபுரை
அதி.88 - பகைத்திறந் தெரிதல்
அதாவது, பகைப்பற்றிய பல்வேறு கூறுகளையும் ஆரா-ந்தறிதல். அவை பகையின் இயல்பும், பகைக்கப்படத் தக்கவர் யாரென்பதும், பகைக்கும் நிலைமையும் பகையையும் நட்பாக்குந் திறனும், பகைவரிடத்து நடந்து கொள்ளும் முறையும் பகை களைய வேண்டிய பருவமும் பிறவுமாம். பகைபற்றி இகலிலும் பகைமாட்சியிலுங் கூறப்படாத பல்வேறு செ-திகளைக் கூறுதலின், இது அவற்றின் பின் வைக்கப்பட்டது.
871. பகையென்னும் பண்பி லதனை யொருவ னகையேயும் வேண்டற்பாற் றன்று.
(இ-ரை.) பகை என்னும் பண்பு இலதனை - பகையென்று சொல்லப்படும் தீயகுணத்தை; ஒருவன் நகையேயும் வேண்டற்பாற்று அன்று ஒருவன் விளையாட்டிற்கேனும் விரும்பத்தக்கதாக அரசியல் நூலாற் கொள்ளப் படுவதன்று. இது,
"இகலென்ப வெல்லா வுயிர்க்கும் பகலென்னும் பண்பின்மை பாரிக்கும் நோ-" (851)
என்று இதனைக் கண்டித்தது போன்று பகையைப் பொதுப்படக் கண்டித்ததாகும். அன்பு என்னும் பண்பாட்டுக் குணத்திற்கு மறுதலையாகலின் 'பண்பிலதனை' என்றும், விளையாட்டே வினையாகவும் முடியுமாதலின் 'நகையேயும்' என்றும், வேண்டாமை தொல்லாசிரியர் துணிபென்பார் நூலின்மேல் வைத்தும் கூறினார். 'இலதனை' என்னும் இரண்டாம் வேற்றுமை அரசியல் நூல் என்னும் பெயரை அவாவி நின்றது. இராமன் பையற் பருவத்தில் விளையாட்டாக மந்தரை கூன்மீது மண்ணுண்டை யடித்தது, பின்பு காளைப் பருவத்தில் நாடுவிட்டுக் காடு செல்லக் கரணியமாயிற்று என்னுங் கதை, "விளையாட்டா யிருந்தது வினையா- முடிந்தது" என்னும் பழமொழிக்குச் சிறந்த எடுத்துக்காட்டாம். ஏகாரம் பிரிநிலை. உம்மை இழிவுசிறப்பு.
872. வில்லே ருழவர் பகைகொளினுங் கொள்ளற்க சொல்லே ருழவர் பகை.
(இ-ரை.) வில் ஏர் உழவர் பகை கொளினும் - வில்லை ஏராகக் கொண்ட உழவராகிய பொருநரொடு பகை கொண்டாலும்; சொல் ஏர் உழவர் பகை கொள்ளற்க - சொல்லை ஏராகக் கொண்ட உழவராகிய அறிஞரொடு பகைகொள்ளாதிருக்க.