876. தேறினுந் தேறா விடினு மழிவின்கட் டேறான் பகாஅன் விடல்.
(இ-ரை.) அழிவின்கண் - இருபகைவருள் ஒருவனால் தோல்வி நேர்ந்தவிடத்து; தேறினும் தேறாவிடினும் - இன்னொரு பகைவனைத் தெளிந்தானாயினும்; தெளிந்திலனாயினும், தேறான் பகான் விடல் - அவனொடு சேராமலும் அவனைவிட்டு நீங்காமலும் இடைநிலையில் நின்றுகொள்க.
முன் தெளிந்தானாயினும் அப்பொழுது கூடாதிருக்க என்றது உடனின்று கெடுக்காதிருத்தற் பொருட்டு. தெளிந்திலனாயினும் அப்பொழுது நீங்காதிருக்க என்றது, வெளிப்படைப் பகையால் மேலுந் தனக்குக் கேடு வராதிருத்தற்பொருட்டு. 'தேறான்', 'பகான்' எதிர்மறை முற்றெச்சங்கள். 'பகாஅன்' இசைநிறை யளபெடை. இக் குறளால் பகையை நொதுமலாக்கல் கூறப்பட்டது.
877. நோவற்க நொந்த தறியார்க்கு மேவற்க மென்மை பகைவ ரகத்து.
(இ-ரை.) நொந்தது அறியார்க்கு நோவற்க - தான் துன்புற்றதை அறியாத நண்பர்க்குத் தன் துன்பத்தைச் சொல்லற்க; பகைவரகத்து மென்மை மேவற்க - வலியின்மை பார்த்திருக்கும் பகைவரிடம் தன் வலியின்மையை மேலிட்டுக் கொள்ளற்க.
நோதல்வினை இங்கு நோதலைச் சொல்லுதலைக் குறித்தது. சொல்லும்போதும் உள்ளத்தில் நோதல் தோன்றுதலின். அரசியல் வாழ்க்கையில் நட்புப் பெரும்பாலும் நிலையில்லாததும் உண்மையற்றது மாதலின், பகைவரிடம் வெளிப்படுத்தக் கூடாததைச் சொல்லும்போதே, நண்பரிடம் சொல்லக்கூடாததையும் உடன் கூறினார்.
878. வகையறிந்து தற்செ-து தற்காப்ப மாயும் பகைவர்கட் பட்ட செருக்கு.
(இ-ரை.) வகை அறிந்து தற்செ-து தற்காப்ப - வினை செ-யும் வகையறிந்து அதற்கேற்பத் தன்னை வலிமைப்படுத்தித் தற்காப்புஞ் செ-து கொள்ளின்; பகைவர்கண் பட்ட செருக்கு மாயும் - பகைவரிடத்துள்ள இறுமாப்புத் தானே நீங்கிவிடும்.