பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 3.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

திருக்குறள்

தமிழ் மரபுரை


வார்' என்றும், படை, அரண், நட்பு முதலிய பிற காவல்கள் அவரால் அழிக்கப்பட்டுவிடுமாதலின் 'தலை' என்றும் கூறினார். இதனால் பெரியாரைப் பிழையாமையின் இன்றியமையாமை கூறப்பட்டது.

892. பெரியாரைப் பேணா தொழுகிற் பெரியாராற் பேரா விடும்பை தரும்.

(இ-ரை.) பெரியாரைப் பேணாது ஒழுகின் - அறிவாற்றல் மிக்க பெரியாரை அரசர் நன்கு மதித்துப் போற்றாது ஒழுகுவராயின்; பெரியாரால் பேரா இடும்பை தரும் - அது அப் பெரியாரால் அவர்க்கு எப்போதும் நீங்காத துன்பங்களை உண்டாக்கும்.

துன்பங்கள் இருமையிலும் தம்மாலும் பிறவுயிர்களாலும் தெ-வத்தாலும் இடையறாது நேர்வன. அவை தாமே தேடிக்கொண்டவை யென்பது தோன்ற, ஒழுக்கத்தை வினைமுதலாக்கியும் பெரியாரைக் கருவியாக்கியும் கூறினார். இதனாற் பெரியாரைப் பிழைத்தலின் தீமை பொதுவகையாற் கூறப்பட்டது.

893. கெடல்வேண்டிற் கேளாது செ-க வடல்வேண்டி னாற்று பவர்க ணிழுக்கு.

(இ-ரை.) கெடல் வேண்டின் - ஒருவன் தான் கேடடைவதை விரும்பினனாயின்; அடல்வேண்டின் ஆற்றுபவர்கண் இழுக்கு - பிறரைக் கொல்ல விரும்பின் அப்பொழுதே கொல்லவல்ல பெரியாரிடத்துத் தவற்றை; கேளாது செ-க - தன் அமைச்சரின் அல்லது துணைவரின் அறிவுரையைப் பொருட் படுத்தாது செ-க.

"காலனுங் காலம் பார்க்கும் பாராது வேலீண்டு தானை விழுமியோர் தொலைய வேண்டிடத் தடூஉம் வெல்போர் வேந்தே" (புறம்.41)

"குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயுங் காத்த லரிது" (குறள்.26)

என்பவற்றால், அடல்வேண்டி னாற்றும் இருவகைப் பெரியாரையும் அறிந்து கொள்க.