894. கூற்றத்தைக் கையால் விளித்தற்றா லாற்றுவார்க் காற்றாதா ரின்னா செயல்.
(இ-ரை.) ஆற்றுவார்க்கு ஆற்றாதார் இன்னா செயல் - தாம் கருதியதை உடனே முடிக்கும் ஆற்றலுடைய பெரியார்க்கு, அஃதில்லாத சிறியார் தாம் முற்பட்டுத் தீமை செ-தல்; கூற்றத்தைக் கையால் விளித்த அற்று -குறித்த காலத்தில் தானே தப்பாது வரக்கடவனாகிய கூற்றுவனை, அதற்கு முன்பே வலியக் கைதட்டி அழைத்தாற்போலும்.
கையால் விளித்தல் தொலைவிலிருப்பவரை உடனே வருவித்தற் குறிப்பினது. இவ் விருகுறளாலும் பெரியாரைப் பிழைப்பவர் தம் கேட்டைத் தாமே விரைந்து வருவித்துக் கொள்ளுதல் கூறப்பட்டது. 'ஆல்' அசைநிலை.
895. யாண்டுச்சென் றியாண்டு முளராகார் வெந்துப்பின் வேந்து செறப்பட்டவர்.
(இ-ரை.) வெம் துப்பின் வேந்து செறப்பட்டவர் - கடுவலிமையுள்ள பேரரையனாற் சினக்கப்பட்டவர்; யாண்டுச் சென்று யாண்டும் உளர் ஆகார் - அவனுக்குத் தப்பி எங்குச் செல்லினும் எங்கும் உயிரோடிரார்.
வெம்மை தீப்போல அழித்துவிடும் கடுமை. வெந்துப்பின் வேந்தனுக்குப் பன்னாட்டிலும் அதிகாரமோ அச்சப்பாடோ சா-காலோ இருக்கு மாதலானும், அவனுக்குத் தப்பியோடியவர் எந்நாட்டுப் புகுந்தாலும் அந் நாட்டரசனால் கொல்லப்படுவதோ வேந்தனிடம் ஒப்புவிக்கப்படுவதோ உறுதியாதலானும், 'யாண்டுச்சென் றியாண்டு முளராகார்' என்றார். 'சென்றும்' என்னும் எச்சவும்மை தொக்கது. 'வேந்து' வேந்தன் என்பதன் மரூஉ. உம்மை முற்றும்மை.
896. எரியாற் சுடப்படினு மு-வுண்டா மு-யார் பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.
(இ-ரை.) எரியால் சுடப்படினும் உ-வு உண்டாம் - ஒருவன் வீடு பற்றி வேகும்போது அல்லது விளக்குத் தன்மேல் பட்டபோது தீயாற் சுடப்பட்டானாயினும், எண்ணெயாலும் மருந்தாலும் ஒருகால் சாவினின்று தப்புதல் கூடும்; பெரியார்ப் பிழைத்து ஒழுகுவார் உ-யார் ஆயின், தவத்தாற் பெரியார்க்குத் தவறாக நடந்தவர் ஒருவகையாலும் தப்பார்.