144
திருக்குறள்
தமிழ் மரபுரை
கசேந்திரன் எனப் பொதுச்சொல்லாயும் வழங்குவதையும், கிறித்துவிற்கு முன் தமிழகம் முழுதும் மூவேந்தர் ஆட்சிக்குட்பட்டே யிருந்தமையையும், வேந்தனும் இந்திரனும் மழைத்தெ-வமாகவே வணங்கப்பட்டமையையும் வேந்தன் விழாவே இந்திர விழாவென வடநாட்டில் வழங்கியமையையும், ஆரியர் தென்னாடு வந்தபின் அவ் வடநாட்டு வழக்கே தமிழகத்திலும் புகுத்தப்பட்டமையையும், நோக்குக. நகுடன் அகத்தியனால் வெகுளப்பட் டுத் தன் இந்திரப் பதவியை இழந்தானென்று பரிமேலழகர் கூறியிருக்கும் ஆரியக் கட்டுக்கதை இங்கு எடுத்துக்காட் டாகாது. உம்மை உயர்வுசிறப்பு. இக் குறளால் விண்ணுலக வேந்தனும் முனிவர் வெகுளிக்குத் தப்ப முடியாமை கூறப்பட்டது.
900. இறந்தமைந்த சார்புடைய ராயினு மு-யார் சிறந்தமைந்த சீரார் செறின்.
(இ-ரை.) சிறந்து அமைந்த சீரார் செறின் - மாபெருந் தவமுனிவர் வெகுள்வாராயின்; இறந்து அமைந்த சார்பு உடையராயினும் உ-யார் - அவரால் வெகுளப்பட்டவர் தலைசிறந்த துணையை யுடையவராயினும் தப்பிப் பிழையார்.
சீருடைய தவவலிமை 'சீர்' எனப்பட்டது. 'இறந்தமைந்த சார்பு'கள் சோவரண், மாபெருந் தொல்படை, பேரரையர் நட்பு முதலியன. 'செறின்' என்பதற்கு 897ஆம் குறளில் உரைத்தவா றுரைக்க. இவ் வைந்து குறளாலும் முனிவரைப் பிழைத்தலின் தீமை கூறப்பட்டது. உம்மை உயர்வுசிறப்பு.
அதி. 91- பெண்வழிச் சேறல்
அதாவது, காமவின்பக் கழிபேராசைபற்றி, தனக்கு அடங்கி நடக்க வேண்டிய தன் மனைவிக்குத் தான் அடங்கி நடத்தல். இதனாற் கடமை தவறுதலும் அறஞ்செ-யாமையும் வீண் செலவுந் தீவினையுஞ் செ-தலும் நேர்தலால், இது பகையோடொத்ததாகவும் பெரியாரைப் பிழைத்தற்கு இடந்தருவதாகவும் இருத்தல்பற்றி, பெரியாரைப் பிழையாமையின் பின் வைக்கப்பட்டது. சேறல் செல்லுதல். அஃது இங்கு நடத்தலைக் குறித்தது.
"ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே" என்னும் பழமொழிக்கேற்ப, பெண்டிருள் நல்லமைச்சர் போன்றவரும் தீயமைச்சர் போன்றவரு மிருப்பினும், ஏற்புழிக்கோடல் என்னும் உத்தியால், இங்குப் பெண் என்றது தீயமைச்சர் போன்ற பெண்டிரையே என அறிந்துகொள்க.