பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 3.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பொருட்பால் - உறுப்பியல் (நட்பு) - வரைவின் மகளிர்

155

'மதிநலத்தின் மாண்ட அறிவினவர்' என்றும், மாட்சிமைப்பட்ட அறிவினர்க்கு விலைமகளிர் நலத்தின் பொதுமையும் புன்மையும் விளங்கித் தோன்றுதலால் 'தோயார்' என்றும் கூறினார்.

916. தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்

புன்னலம் பாரிப்பார் தோள்.

(இ-ரை.) தம் நலம் பாரிப்பார் கல்வியறிவாலும் நற்குண நற்செ-கை யாலும் தம் புகழை உலகத்திற் பரவச்செ-யும் உயர்ந்தோர்; தகை செருக்கிப் புல் நலம் பாரிப்பார் தோள் தோயார் - ஆடல், பாடல், ஒப்பனை முதலியவற்றால் தம் திறத்தை மிகுத்துத் தம்மால் ஆடவர் பெறும் இன்பத்தைப் பொருள் கொடுப்பாரிடத்தெல்லாம் பரப்பும் விலைமகளிரின் தோளைத் தீண்டார்.

தகை அழகு. தோயின் புகழ் கெடுமாதலின் 'தோயார்' என்றார். ‘தந்நலம்` என்பதில் 'நலம்' ஆகுபொருளது. இம் மூன்று குறளாலும் உயர்ந் தோர் விலைமகளிரைத் தீண்டாமை கூறப்பட்டது.

917.

நிறைநெஞ்ச மில்லவர் தோ-வர் பிறநெஞ்சிற்

பேணிப் புணர்பவள் தோள்.

(இ-ரை.) நிறைநெஞ்சம் இல்லவர்

தீயவழியிற் செல்லாதவாறு

மனத்தைத் தடுத்து நிறுத்தும் ஆற்றலில்லாத ஆடவர்; நெஞ்சில் பிற பேணிப் புணர்பவர் தோள் தோ-வர் - காதலாலும் மதிப்பாலும் உள்ளத்திற் கூடாமல் பொருளையும் அதனாற் பெறுவனவற்றையுமே விரும்பி உடம்பால்மட்டும் கூடும் விலைமகளிர் தோள்களைத் தழுவுவர்.

உள்ளத்தாற் கூடாமற் பொருளாசைபற்றி உடம்பால் மட்டும் கூடும் விலைமகளிர், பொருள் கொடுத்தால் அன்றுமட்டும் தரும் இன்பத்தின் பொதுமை சிறுமை பொ-ம்மை நோ -மைகளை அறிந்து தம் மனத்தை அடக்கியவர் தோயாராதலின், அவரல்லாதவர் தோ-வர் என்றார்.

918. ஆயு மறிவின ரல்லார்க் கணங்கென்ப

மாய மகளிர் முயக்கு.

(இ-ரை.) மாய மகளிர் முயக்கு அழகு, ஒப்பனை, நளினம், தளுக்கு, ஆடல், பாடல் முதலியவற்றால் ஆடவரை, சிறப்பாக இளைஞரை, மயக்கி வஞ்சிக்கும் விலைமகளிரின் தழுவலை; ஆயும் அறிவினர் அல்லார்க்கு