பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 3.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பொருட்பால் - உறுப்பியல் (நட்பு) - சூது

167

(இ-ரை.) ஆயம் கொளின் ஒருவன் சூதாட்டைப் பொழுதுபோக் காகவோ பொருளீட்டும் வழியாகவோ மேற்கொள்ளின்; ஒளி கல்வி செல் வம் ஊண் உடை என்னும் ஐந்தும் அடையாவாம் -அவனைப் பெயர் விளங் கலும் கல்வியும் செல்வமும் ஊணும் உடையும் ஆகிய ஐந்தும் சேராவாம்.

அகவுடைமையும் புறவுடைமையுமாகிய எல்லாப் பொருள்களும் இல்லாதவனாவான் என்பதாம். சூதாட்டிலேயே காலங்கழிப்பவனுக்குப் புதுப்பொருள் வராமையாலும் பழம்பொருள் போ-விடுதலாலும், 'ஐந்தும்' அடையாவாம்' என்றார். அரசனாயின், அவன் செல்வம் படை, குடி,நாடு, கூழ், அரண், கருவூலம், உரிமைச் சுற்றம் முதலியனவாம். 'ஒளி', 'கல்வி' முதலியன செ-யுள் நடைநோக்கி முறைமாறி நின்றன. ஆயம் சூதாட்டு. 'ஐந்தும்' முற்றும்மை. சூதாட்டிலேயே காலங்கழிப்பவனுக்குக் கல்வி கற்க நேரமின்மையாலும், ஏற்கெனவே கற்றதும் "நூறு நாள் ஓதி ஆறுநாள் விடத் தீரும்" என்ற பழமொழிப்படி மறந்து போமாதலாலும், மறவாத ஒழுக்க நெறி முறைகளும் கைக்கொள்ளப்படாவாதலாலும், அடையாப் பொருள்களுள் கல்வியும் ஒன்றாகக் கொள்ளப்பட்டது. ஊண்போல் உடையும் இல்லாமற் போவானென்றது பொதுப்பட வறுமை குறித்ததேயன்றி, நளன் நாடிழந்து காடடைந்தபின் ஓதிமத்தை (அன்னத்தை) வளைத்து ஆடை யிழந்ததையும், பாண்டவர் தம்மைப் பணையமாக வைத்தாடித் தோற்றுத் தம் மேலாடை யிழந்ததையும் குறித்ததன்று.

940. இழத்தொறூஉங் காதலிக்குஞ் சூதேபோற் றுன்ப முழத்தொறூஉங் காதற் றுயிர்.

(இ-ரை.) இழத்தொறும் காதலிக்கும் சூதேபோல் - பணையம் வைத்த பொருள்களை இழக்குந்தோறும் அவற்றை மீட்டற்பொருட்டும் மேற்கொண்டு ஈட்டற்பொருட்டும் சூதின்மேற் பற்று வைக்குஞ் சூதன்போன்றே; உயிர் துன்பம் உழத்தொறும் காதற்று -ஆதன்(ஆன்மா) உடம்பால் மூவழித் துன்பங்களையும் பட்டு வருந்துந்தோறும் அதன்மேற் பற்றுவைக்குந் தன்மையதாம்.

உயிர்வினையை உவமமாகவும் சூதன் வினையைப் பொருளாகவுங் கூறுவதே அதிகார முறையாயினும், முன்னதன் முதன்மைபற்றி மாற்றிக் கூறினார். இங்ஙனம் இருவகைக் காதலையுங் கூறியது பெரும்பான்மை பற்றியாகலின், உடம்பை வெறுத்துத் துறவுபூணுவதும் சூதை வெறுத்து நல்வழிப்படுவதும் சிறுபான்மை யுண்டென வறிக. துன்பப்படுந்தொறும்