பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 3.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பொருட்பால் - உறுப்பியல் (நட்பு) மருந்து

169

மருத்துவ அகரமுதலி மலையகராதியென்றும், தமிழ மருத்துவம் சித்த மருத்துவம் என்றும் பெயர்பெற்றன.

கள்ளுண்ணாமையென்றும்

பெரியாரைப் பிழைத்தல், கள்ளுண்டல் என்னும் பகைகள் பெரியா ரைப் பிழையாமையென்றும், எதிர்மறை வடிவிற் கூறப்பட்டதுபோன்றே, நோ- என்னும் பகையும் இங்கு மருந்து என்னும் மாற்றுப்பெயராற் கூறப்பட்டதென்க. மற்றப் பகைகளைப் போலாது இஃது அம்மை யிம்மை யும்மையென்னும் மும்மையுந் தழுவுவுதால், இறுதியில் வைக்கப்பட்டது.

941.

மிகினுங் குறையினு நோ-செ-யு நூலோர்

வளிமுதலா வெண்ணிய மூன்று.

(இ-ரை.) நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று மருத்துவ நூலார் ஊதை (வாதம்) முதலாக எண்ணிய முக்கூறுகளும்; மிகினும் குறையினும் நோ- செ-யும் - தாம் இருக்க வேண்டிய அளவிற்குக் கூடினாலும் குறைந்தாலும் உடம்பிற் பல்வேறு நோ-களை உண்டுபண்ணும்.

‘வளிமுதலா வெண்ணிய மூன்று' ஊதை பித்தங் கோழை (சிலேட்டுமம்) என்பன. ஐ அல்லது ஐயம் என்பது கோழைக் கொருபெயர். இம் மூன்றும் உடம்பிலிருந்து வெவ்வேறு நற்றொழில் செ-யும் இன்றியமையாக் கூறுகளேயன்றி, நோ-களல்ல. மூச்சும் பேச்சும் உட்பொருளிடமாற்றமும் வெளியேற்றமும் தனித்தும் பிற தாதுக்களோடு கூடியும் நிகழ்த்துவது ஊதையின் தொழில்கள்; உண்டதன் செரிமானத்திற்கு உதவுவது பித்தநீர்; தசைநார்களின் மழமழப்பான இயக்கத்திற்கு உணவுடை செயல்களின் ஒவ்வாமையாலும் இயற்கை வேறுபாட்டாலும் மிகுதலுங் குறைதலும் நேரும்பொழுதே, அவற்றின் விளைவாக நோ-கள் உண்டாகும் என அறிக. இதற்கு மாறாக, மிகுதல் குறைதல்களை உணவு செயல்களின் தொழிலாக வுரைத்துள்ளார் பரிமேலழகர். உணவொவ்வாமையாவது, சுவை மணம் ஆற்றல்களால் உடற்கூற்றொடும் கால விடங்களொடும் பொருந்தாமை. உடையொவ்வாமையாவது காலத்திற்கும் இடத்திற்கும் ஏற்காமை. செயலொவ்வாமை மிகையுந் தகாமையும், முற்றும்மை தொக்கது. ஆக என்னும் வினையெச்ச வீறு. 'ஆ' எனக் கடைக்குறைந்து நின்றது. 'நூலோர்' என்பதற்கு ஆயுள்வேத முடையோர் என்று பரிமேலழகர் உரைத்ததும் நச்சுக் கூற்றே. சித்த மருத்துவத்தின் வடநாட்டு வேறுபாடே ஆயுர்வேதம் என அறிக.