பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 3.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180

திருக்குறள்

தமிழ் மரபுரை





தாயைவிட்டுப் பிரிந்த பிள்ளையின் ஏக்கமும், ஒரு குமரியின்மேல் ஒரு குமரன் கொண்ட உண்மையான ஆழ்ந்த காதலும், அவற்றிற்குரிய ஆசைப் பொருளை அடைந்தாலன்றி நீங்கா. "தூங்கின பிள்ளை பிழைத்தாலும் ஏங்கின பிள்ளை பிழைக்காது."

"பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை

தன்நோ-க்குத் தானே மருந்து.

(குறள்.110)

ஒரு பெண்ணின்மேல் வைத்த ஆசையால் நலிவுற்று நாள்தோறும் மெலிவுற்ற ஓர் இளைஞனின் காதலியை, ஒரு மருத்துவன் பின்வருமாறு நாடி பார்த்துக் கண்டுபிடித்தான். அவ் விளைஞன் வாழ்ந்த நகரப்பகுதிகளின் பெயர்களை ஒவ்வொன்றாகச் சொல்லி வருங்கால் அவன் காதலி குடியிருந்த பகுதியைச் சொல்லும் போதும், அப் பகுதியிலுள்ள தெருப் பெயர்களைச் சொல்லிவருங்கால் அவள் குடியிருந்த தெருப்பெயரைச் சொல்லும்போதும், அத் தெருவிலுள்ள வீட்டு எண்களைச் சொல்லிவருங்கால் அவள் குடியிருந்த வீட்டு எண்ணைச் சொல்லும் போதும், அவ் வீட்டிலுள்ள ஆள்களின் பெயர்களைச் சொல்லி வருங்கால் அவள் பெயரைச் சொல்லும் போதும், அவன் நாடி அதிகமா-த் துடித்தது.

இங்ஙனம் பல்வேறு வழிகளெல்லாம் அடங்குதற்கு, 'அது தணிக்கும் வா-நாடி வா-ப்பச் செயல்' என்றார். பல்வேறு நஞ்சுகளை மாற்றும் அல்லது வெளியேற்றும் நஞ்சு மருத்துவமும் பே-க்கோளாறுகளை நீக்கும் பே- மருத்துவமும் தனிப்பட்ட மருத்துவத் துறைகளாம்.

949. உற்றா னளவும் பிணியளவுங் காலமும் கற்றான் கருதிச் செயல்.

-

(இ-ரை.) கற்றான் - சித்த மருத்துவத்தைக் கற்றவன்; உற்றான் அளவும் பிணி அளவும் காலமும் கருதிச் செயல் நோயாளியின் அளவையும் அவ னது நோயின் அளவையும் காலத்தின் நிலைமையையும் நோக்கி, அவற்றிற் கேற்றவாறு தன் நூலறிவையும் பட்டறிவையும் பயன்படுத்தி மருத்துவஞ் செ-க.

'உற்றான்' என்றது பிணியுற்றவனை. பின்னாற் பிணியென்று வருகின் றமையின் உற்றானென்று கூறியொழிந்தார். நோயாளியளவு உடற்கூறு, பருவம், உடல்வலிமை, உளவலிமை ஆகியவற்றின் அளவு, நோயளவு; வன்மை மென்மை யென்னும் தாக்கல் வேறுபாடும், தொடக்கம் இடை