196
திருக்குறள்
தமிழ் மரபுரை
196
திருக்குறள்
978. பணியுமா மென்றும் பெருமை சிறுமை
அணியுமாந் தன்னை வியந்து.
—
தமிழ் மரபுரை
(இ-ரை.) பெருமை என்றும் பணியும் பெருமை யுடையார் எக்காலத் துஞ் செருக்கின்றி அடங்கியொழுகுவர்; சிறுமை (என்றும்) தன்னை வியந்து அணியும் - மற்றச் சிறுமை யுடையார் எக்காலத்துந் தம்மை மெச்சி உயர்வு படுத்திக் கூறுவர்.
மாந்தரின் செயல்கள் அவர் பண்பின்மேல் ஏற்றிக் கூறப்பட்டன. 'என்றும்’ என்பது இரு தொடருக்கும் பொதுவா- நின்றது. 'ஆம்' ஈரிடத்தும் அசை நிலை.
979. பெருமை பெருமித மின்மை சிறுமை
பெருமித மூர்ந்து விடல்.
(இ-ரை.) பெருமை பெருமிதம் இன்மை - பெருமைக் குணமாவது பெரு மிதத்திற் கேற்ற சிறப்பிருந்தும் அதை யியல்பெனக் கொண்டு அமைந் திருத்தல்; சிறுமை பெருமிதம் ஊர்ந்து விடல் சிறுமைக் குணமாவது ஒரு சிறப்பும் இல்லாதிருந்தும் அதைத் தன்மேல் ஏற்றிக்கொண்டு செருக்கின் எல்லைவரை சென்றுவிடுதல்.
இங்கும் மாந்தர் செயல்கள் அவர் பண்பின்மேல் ஏற்றிக் கூறப்பட்டன. 'ஊர்ந்துவிடல்' முடிவிடம்வரை ஏறிச்செல்லுதல்; குறிப்புருவகம். 'விடும்' என்பது மணக்குடவ காலிங்கர் பாடம்.
980. அற்ற மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும்.
(இ-ரை.) பெருமை அற்றம் மறைக்கும் - பெருமையுடையார் பிறர் மானச் செ-திகளையே கூறி அவமானச் செ-திகளை மறைத்துவிடுவர்; சிறுமை குற்றமே கூறிவிடும் - மற்றச் சிறுமையுடையாரோ பிறர் குணத்தை யெல்லாம் மறைத்துக் குற்றங்களையே கூறிவிடுவர்.
இங்கும் மாந்தர் செயல்கள் அவர் பண்பின்மேல் ஏற்றிக் கூறப்பட்டன. மறைத்தலும் கூறுதலும் ஏனையிடத்தும் இயைந்தன. 'தான்' அசைநிலை. ஏகாரம் பிரிநிலை. இம் மூன்று குறளும் வேற்றுமை யணிகொண்டு இரு சாரார் செயலையும் ஒருங்கு கூறின.