பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 3.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208

திருக்குறள்

தமிழ் மரபுரை





ஏதம் - அவ் விரண்டுஞ் செ-தற்கேற்ற தன் பெருஞ் செல்வத்திற்கு ஒரு நோயாவன்.

செல்வத்தின் பயன்படுந் தன்மையை நோ-போற் கெடுத்தலின், 'நோ- ' என்றார். 'தக்கார்` அந்தணர், அடியார், புலவர் முதலியோர். 'தக்கார்' என்றதனால், தகுதியில்லார்க்கு ஈதல் தவறென்பது பெறப்படும். 'ஏதம்' ஆகு பெயர். எச்சவும்மை தொக்கது. இனி, அவ் விருபயனும் கொள்ளாதவனது பெருஞ்செல்வம் துன்பமே தரும் என்பது அத்துணைச் சிறந்ததன்று.

1007. அற்றார்க்கொன் றாற்றாதான் செல்வ மிகநலம் பெற்றா டமியள்மூத் தற்று.

-

அ-ரை.) அற்றார்க்கு ஒன்று ஆற்றாதான் செல்வம் ஒரு பொருளு மில்லாதார்க்கு அவர் வேண்டிய தொன்றைக் கொடாதவனது செல்வம் வீணா-க்கழிதல்; மிக நலம் பெற்றாள் தமியள் மூத்த அற்று -குணத்திற் சிறந்த கட்டழகி யொருத்தி மணஞ்செ-து கொடுப்பாரின்மையால் கணவனின்றித் தனித்தவளா மூத்த தன்மைத்து.

இதில் வந்துள்ள உவமம் பெண்ணின் உரிமையின்மையைக் காட்டுத லால், பெரும்பாலும் பண்டைக் காலத்திற்கே ஏற்றதாம். எனினும். இக் காலத் திலும் இது நிகழக்கூடிய தாதலால் உவமமாதற்கு எள்ளளவும் இழுக்கில்லை யென்க. ‘நலம்’ அகத்தழகு புறத்தழகு என்னும் இரண்டையுங் குறிக்கும். 'பெற்றாள்' என்பது இரண்டையும் ஒருங்கே பெறுதலின் அருமையை உணர்த்தும். பயன்படாமை செல்வத்திற்கும் பெண்ணிற்கும் பொதுவேனும், செல்வம் நுகர்ச்சிப் பொருளாகவே யிருப்பதென்றும், பெண் கணவனை நோக்க நுகர்ச்சிப் பொருளாகவும் தன்னை நோக்க நுகர்வாளாகவும் இருப் பவள் என்றும், வேறுபாடறிதல் வேண்டும். இதனால் தன் விருப்பப்படியே இறுதிவரை மணஞ் செ-யாதிருக்கும் குணமணிக் கட்டழகி, இக் குறட்கேற்ற உவமமாகாள் என்பதையும் அறிந்துகொள்க.

1008. நச்சப் படாதவன் செல்வ நடுவூரு

ணச்சு மரம்பழுத் தற்று.

-

(இ-ரை.) நச்சப் படாதவன் செல்வம் வறியவர்க்கு அருகிலிருந்தும் ஒன்றுங் கொடாமையின் அவரால் விரும்பப்படாதவன் செல்வமுடையவனா யிருத்தல்; நடு ஊருள் நச்சு மரம் பழுத்த அற்று ஊர் நடுவில் எட்டிமரம் பழுத்தாற் போலும்.