பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 3.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாக வுரிய புகழும் விளைக்காத வினைகளை; என்றும் ஒருவுதல் வேண்டும் – எக்காலத்தும் அமைச்சர் செ-யாது விட்டுவிடுதல் வேண்டும்.

துன்பநிலைமையும் நெருக்கிடை நிலைமையும் உட்பட 'என்றும்' என்றார். இறப்பின் பின்னரே புகழ் சிறந்து தோன்றும் என்பதை,

"நத்தம்போற் கேடு முளதாகுஞ் சாக்காடும்

வித்தகர்க் கல்லா லரிது"

(குறள்.335)

என்பதனால் அறிக.

653. ஓஒதல் வேண்டு மொளிமாழ்குஞ் செ-வினை
யாஅது மென்னு மவர்.

(இ-ரை.) ஆதும் என்னும் அவர் - யாம் மேன்மேல் உயர்வேம் என்னும் உயர்வெண்ணங் கொண்டவர்; ஒளி மாழ்கும் செ-வினை ஓதல் வேண்டும் - தம் மதிப்புக் கெடுவதற் கேதுவான வினைகளைச் செ-யாது விட்டுவிடுதல் வேண்டும்.

மதிப்புக் கெடுவதற் கேதுவான வினைகளைச் செ-பவர் மேன்மே லுயரமுடியாது என்பது கருத்து. ஓவுதல் என்பது ஓதல் எனக் குறைந்து நின்றது. ஒளிமாழ்குஞ் செ-வினை' ஒளி மாழ்குவதற் கேதுவாகச் செ-யும் வினை என்க. 'ஓஒதல்', 'ஆஅதும்' என்பன இசைநிறை யளபெடைகள். ஒளியென்பது உடலோடு கூடி வாழும் நாளில் உளதாகும் நன்மதிப்பு.

654. இடுக்கட் படினு மிளிவந்த செ-யார்
நடுக்கற்ற காட்சி யவர்.

(இ-ரை) நடுக்கு அற்ற காட்சியவர் அசைவில்லாத தெளிந்த அறிவினையுடையார்; இடுக்கண் படினும் இளிவந்த செ-யார் - தாம் துன்பத்துள் அகப்பட்டாலும் அத் துன்பந் தீர்தற்பொருட்டுத் தமக்கு இழிவு தரும் வினைகளைச் செ-யமாட்டார்.

இன்பமுந்துன்பமுங் கலந்ததே இவ்வுலக வாழ்வென்றும், வருவது வந்தே தீருமென்றும், இழிவினைகளைச் செ-வதால் இம்மையிற் பழியும் மறுமையில் துன்பமுமே உண்டாகு மென்றும், அறவழியாற் போக்க முடியாத துன்பத்தை அமைதியாக நுகர்ந்தேயாக வேண்டுமென்றும், தெள்ளத்-