பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 3.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈன்றாள் பசிகாண்பா னாயினும்' என்பது, பசித்தவர் ஈன்றாளே யாயினும் என்று பொருள்படுவதால், உம்மை உயர்வுசிறப்பாம்.

"இறந்த மூப்பினராய இருமுது குரவருங் கற்புடை மனைவியுங் குழவியும் பசியான் வருந்து மெல்லைக்கண், தீயன பலவுஞ் செ-தாயினும் புறந்தருக வென்னும் அறநூற் பொது விதி, பொருணூல்வழி யொழுகுதலும் அரசர் தொழிற்குரியராதலும் நன்கு மதிக்கற்பாடு முடைய அமைச்சர்க் கெ-தாமைபற்றி இவ்வாறு கூறினார்" என்று பரிமேலழகரே கூறியிருத்தலால், ஆரிய அறத்தினும் தமிழ அறம் நனிதவச் சிறந்த தென்பதை அவர் வா-ஒப்புக்கொள்ளாவிடினும் உள்ளம் ஒப்புக்கொள்கின்ற தென்பதும், "அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செ-தலும் விலக்கியன ஒழிதலுமாம்" என்று அவர் தம் உரைமுகத்திற் கூறியிருப்பது இதனால் அடிபடுகின்ற தென்பதும் அறியப்படும்.

657.பழிமலைந் தெ-திய வாக்கத்திற் சான்றோர்
கழிநல் குரவே தலை.

(இ-ரை.) பழிமலைந்து எ-திய ஆக்கத்தின் - அறிவிலாதார் தீவினைகளைச் செ-து அவற்றாற் பழியைத் தம் தலைமேல் ஏற்றுக்கொண்டு பெற்ற செல்வத்தைவிட; சான்றோர் கழிநல்குரவே தலை - அப் பழியை மேற்கொள்ளாத அறிவுடையோரின் கடுவறுமையே சிறந்ததாம்.

சான்றோர் அறிவு அல்லது நற்குணம் நிறைந்தோர். தீயோர் செல்வம் இம்மைக்குப் பழியும் மறுமைக்குத் துன்பமும் பயத்தலால், அவ் விரண்டு மில்லாத நல்லோர் வறுமை அதனினுஞ் சிறந்தது என்றார். கொடிய வறுமை யாயினும் என்பார் 'கழிநல்குரவு' என்றார். கொடிய வறுமையாவது, நாள் முழுதும் வருந்தியுழைத்தும் வருவது ஒருவேளை யுணவிற்கும் பற்றாமை. ஏகாரம் பிரிநிலை.

658. கடிந்த கடிந்தொரார் செ-தார்க் கவைதா
முடிந்தாலும் பீழை தரும்.

(இ-ரை.) கடிந்த கடிந்து ஓரார் செ-தார்க்கு – அறநூலார் விலக்கிய வினைகளைத் தாமும் விலக்கி விட்டுவிடாமல் பொருள் நோக்கிச் செ-த அமைச்சர்க்கு; அவைதாம் முடிந்தாலும் பீழைதரும் - அவ் வினைகள் ஒருகால் முடிந்தாலும் அவை தூயவல்லாமையால் பின்பு துன்பத்தையே விளைக்கும்.