பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 3.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முடிதல் வெற்றியா - முடிந்து கருதிய பொருள் தருதல். ஒருவார் என்பது ஓரார் எனக் குறைந்து நின்றது. 'முடிந்தாலும்' ஐயவும்மை. பீழை தருவன வினையும் வினையால் வந்த பொருளும்.

659. அழக்கொண்ட வெல்லா மழப்போ மிழப்பினும்
பிற்பயக்கு நற்பா லவை.

(இ-ரை.) அழக்கொண்ட எல்லாம் அழப்போம் - ஒருவன் தீய வினைகளைச் செ-து பிறரை வருத்திப் பெற்ற செல்வ மெல்லாம், இம்மையிலேயே தான் அங்ஙனம் வருந்துமாறு தன்னை விட்டு நீங்கிப்போம்; நல் பாலவை இழப்பினும் பின் பயக்கும் - தூய வினைகளால் வந்த பொருள்களோ முன்பு இழக்கப்படினும் பின்பு வந்து பயன் தரும்.

தீயவழிச் செல்வம் வருவதுபோற் போவது மட்டுமன்றி, வந்த வகையிலேயே போமென்பதை யுணர்த்தற்கு 'அழப்போம்' என்றார். 'இழப்பினும்' ஐயவும்மை. 'பின்' என்றது இம்மைக்கும் மறுமைக்கும் பொதுவாம்.

660. சலத்தாற் பொருள்செ-தே மாத்தல் பசுமட்
கலத்துணீர் பெ-திரீஇ யற்று.

(இ-ரை.) சலத்தான் பொருள் செ-து ஏமாத்தல் - அமைச்சன் வஞ்சனையாற் பொருளீட்டி அதனால் அரசனுக்குப் பாதுகாப்புச் செ-தல்; பசுமண் கலத்துள் நீர் பெ-து இரீஇய அற்று – ஈரம் புலராத பச்சைமட் கலத்துள் நீரை வார்த்து அதற்குப் பாதுகாப்புச் செ-ததனோ டொக்கும்.

நீரோடு பசுமட்கலங் கெடுவதுபோல் வஞ்சனைப் பொருளோடு அரசன் கெடுவான் என்பதாம். ஆக்கஞ் செ-வதுபோல் முன்தோன்றிப் பின்பு அழிவைச் செ-வதால். 'சலத்தால்' என்றார். 'சலம்' வடசொல். ஏம்மார்த்தல் என்பது 'ஏமாத்தல்' என ரகரங் கெட்டு நின்றது. ஏமம் - பாதுகாப்பு. ஆர்தல் - பொருந்துதல். ஆர்த்தல் - பொருத்துதல். 'இரீஇ' இருத்தி யென்று பொருள்படும் சொல்லிசை யளபெடை. இருத்துதல் நீண்ட காலம் இருக்கச் செ-தல்.

அதி. 67 - வினைத்திட்பம்

அதாவது, தூயவினை செ-வானுக்கு வேண்டிய மனத்திண்மை. அதிகார முறையும் இதனால் விளங்கும். திண் - திண்பு - திட்பு - திட்பம். திண்மை திணுக்கத்தால் (செறிவால்) ஏற்படும் உறுதி.