பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 3.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

திருக்குறள்

தமிழ் மரபுரை


சூழ்ச்சி எதிர்ப்பும் தற்காப்பும்பற்றியதாயின், இதை எங்ஙனஞ் செ-வ தென்பதே ஆராயப்படுவதாம். தாக்குதல்பற்றியதாயின், செ-வதா விடுவதா என்பதே முதற்கண்ணும், செ-வதாயின் அதை எங்ஙனஞ் செ-வ தென்பது அதன் பின்னும், ஆராயப்படுவனவாம். ஆகவே, உடன்பாட்டுத் தீர்மானமே 'தாழ்ச்சியுள் தங்குதல் தீது' என்பது அறியப்படும். 'சூழ்ச்சி முடிவு துணிவெ -தல்' எனவே, துணிவெ-தும்வரை சூழவேண்டும் மென்பதும், துணிவில் முடியாத வாறும் துணிவு காலந்தாழ்க்குமாறும் சூழ்வது தீங்கு விளைக்கு மென்பதும் பெறப்படும். துணிந்த வினையை உடனே தொடங்காவிடின், தகுந்த காலந் தப்புதலாலும் ஊக்கங் குன்றுதலாலும் பகைவர் அறிந்தழித்தலாலும் வினை கெடுமாதலான் 'தாழ்ச்சியுள் தங்குதல் தீது' என்றார்.

672. தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செ-யும் வினை.

(இ-ரை) தூங்கிச் செயல்பால தூங்குக மெள்ளச் செ-ய வேண்டிய வினைகளை மெள்ளச் செ-க; தூங்காது செ-யும் வினை தூங்கற்க – விரைந்து செ-ய வேண்டிய வினைகளை விரைந்து செ-க.

மெள்ளச் செ-தல் காலந்தாழ்த்துச் செ-தலும் காலம் நீடச் செ-தலும் என இருவகை. இவற்றுள் முன்னது வினை தொடங்கலையும் பின்னது வினைசெயல் முழுவதையும் பற்றியனவாம். மெள்ளச் செ-ய வேண்டுவதை விரைந்தும் விரைந்து செ-ய வேண்டுவதை மெள்ளவும் செ-யின், அவற்றால் தீமையே விளையும் என்பது கருத்து. இதில் வந்துள்ளது சொற்பொருட் பின்வருநிலையணி.

673. ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே யொல்லாக்காற்
செல்லும்வா- நோக்கிச் செயல்.

(இ-ரை.) ஒல்லும் வா- எல்லாம் வினை நன்றே - இயலுமிடமெல்லாம் போரால் வினைசெ-தல் நல்லதே; ஒல்லாக்கால் செல்லும்வா - நோக்கிச் செயல் - அது இயலாவிடத்து ஏனை மூன்று ஆம்புடைகளுள்ளும் ஒன்றும் பலவும் ஏற்றவற்றை எண்ணிச் செ-க.

வினையென்றது இங்குத் தண்டத்தை. எளிய பகைவரை அடக்குவதும் விரைந்து பொருள் தருவதும் போரேயாகலின், அதை நன்றென்றார். இயலுமிடம் தான் வலியனான காலம்; இயலாவிடம் தான் மெலியனான