26
திருக்குறள்
தமிழ் மரபுரை
ஒட்டிக்கொளல் எனினுமாம். ஏகாரம் தேற்றம். இக் குறளிரண்டும் மெலியன் செயல் கூறின.
680. உறைசிறியா ருண்ணடுங்க லஞ்சிக் குறைபெறிற்
கொள்வர் பெரியார்ப் பணிந்து.
(இ-ரை.) உறைசிறியார் - சிறிய ஆள்நிலத்தையுடைய அமைச்சர்; உள் நடுங்கல் அஞ்சி - வலிய பகைவர் வந்து தம்மைத் தாக்கியவிடத்துத் தம் நாட்டிலுள்ள குடிகள் நடுங்குவது கண்டு அஞ்சி; குறைபெறின் - பகைவருடன் ஏதேனுமொரு வகையில் உடன்படிக்கை செ-துகொள்ள வா-க்குமாயின்; பெரியார்ப் பணிந்து கொள்வர் - அவ்வலிய பகைவர்க்குத் தாழ்ந்து அவர் கூறுங் கட்டுத்திட்டங்களை ஏற்றுக்கொள்வர்.
இது மிகுமெலியன் செயல். வேறு வழியின்மையால் பகைவருக்கு அடங்க வேண்டியதாயிற்று. 'உறை' முதனிலைத் தொழிலாகுபெயர். உறையும் இடம் உறை. அது நாடும் அரணுமாம். 'உள்' இடவாகு பெயர். கொடுங்கோல் மன்னர் நாட்டைக் கைப்பற்ற விரும்புவராதலின், குறைபெறும் அருமை நோக்கிப் 'பெறின்' என்றார். வலியவனுக்குப் பணிந்து திறை கொடாவிடின் அரசு மட்டுமன்றி உயிரையும் இழக்க நேருமாதலின், பெருங்கேட்டினும் சிற்றிழப்பு நன்றென்றார். ஆயினும், பகைவர்க்குப் பணிதல் தன்மானக் கேடாதலின், அதை எதிர்முக ஏவலாகக் கூறாது படர்க்கை வினையாக உலகியல்மேல் வைத்துக் கூறினார். 'உறைசிறியார்' என்றது,
"உயர்திணை தொடர்ந்த பொருள்முத லாறும்
(நன். 377)
என்னும் நெறியீட்டைத் தழுவியதாம்.
அதி. 69 - தூது
அதாவது, அரசரைப் பொருத்தலும் பிரித்தலும் பேணலும்பற்றி வேற்றரசரிடம் அரசரும் அமைச்சரும் முனிவரும் புலவரும் சென்று கூறும் செ-தி. அமைச்சர் செல்வதே பெரும்பான்மை. புலவர் சென்றதற்கு, ஔவையார் அதிகமான்பொருட்டுத் தொண்டைமானிடம் தூது சென்றதை எடுத்துக்காட்டாகக் கொள்க.
தூது என்னும் சொல் தூதுச் செ-தியையும் அதனைச் சொல்வாரையுங் குறிக்கும். வகுத்துரைப்பார், வழியுரைப்பார் எனத் தூதர் இரு வகையார்.