பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 3.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

திருக்குறள்

தமிழ் மரபுரை


நாவன்மையும்; தூது உரைப்பார்க்கு இன்றியமையாத மூன்று - தூது சொல்வார்க்கு இன்றியமையாத மூன்று திறங்களாம்.

'இன்றியமையாத மூன்று' எனவே, முன்பு அமைச்சர்க்குக் கூறப்பட்ட பிற விலக்கணங்களும் வேண்டுமென்பது பெறப்பட்டது.

683. நூலாரு ணூல்வல்ல னாகுதல் வேலாருள்
வென்றி வினையுரைப்பான் பண்பு.

(இ-ரை.) வேலாருள் வென்றி வினையுரைப்பான் பண்பு - வேற்படை யுடைய வேற்றரசரிடஞ் சென்று தன் அரசனுக்கு வெற்றி தரும் வினையைச் சொல்வானுக்கு இலக்கணமாவது; நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் - அரசியல் நூலை அறிந்தவருள் தான் அந் நூலறிவிற் சிறந்தவனா யிருத்தலாம்.

கொல்லுந் திறத்தினர் என்பது தோன்ற 'வேலார்' என்றும், இருவகைத் தூதுவினையும் அடங்க 'வென்றிவினை' என்றும் கூறினார். 'வல்லனாகுதல்' அந் நூற் செ-தி யெல்லாவற்றையும் தெளிவாக அறிந்திருத்தலும், தவறாகச் சொன்னவிடத்து அதைத் திருத்தலுமாம்.

684. அறிவுரு வாரா-ந்த கல்வியிம் மூன்றன்
செறிவுடையான் செல்க வினைக்கு.

(இ-ரை.) அறிவு - இயற்கையான அறிவும்; உரு - கண்டார் மதிக்குந் தோற்றப்பொலிவும்; ஆரா-ந்த கல்வி - ஆரா-ச்சியோடு கூடிய கல்வியும்; இம் மூன்றன் செறிவு உடையான் - ஆகிய இம் மூன்றும் நிறைந்தவன்; வினைக்குச் செல்க - வேற்றரசரிடம் தூதனாகச் செல்க.

இம் மூன்றும் நிறைந்தவன் செல்லின், தூதுவினை சிறப்பாக முடியு மென்பது கருத்து. பல நூல்களையும் அவற்றின் வேறுபட்ட வுரைகளையுங் கற்று உலகியலொடு பொருந்தத் தானும் ஆரா-ந்ததை, 'ஆரா-ந்த கல்வி' என்றார்.

685. தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாந் தூது.

(இ-ரை.) தொகச் சொல்லி - வேற்றரசரிடம் பல செ-திகளைச் சொல்ல வேண்டியிருக்கும்போது, மூவகையாலும் ஒப்புமைவகையாலும் சுருக்க வகையாலும் தொகுத்துச் சொல்லியும்; தூவாத நீக்கி நகச்சொல்லி - வெறுப்