பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 3.pdf/55

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

'ஒளியார்' என்றது சொற்பொழியும் அறிஞரின் மிக்காரையும் ஒத்தாரையும். 'ஒளியார்' ஒள்ளியார் என்பதன் தொகுத்தல். இனி, அகவொளியாகிய அறிவுடையார் எனினுமாம். ஒள்ளியராதல் மதிநுட்பமும் நூற்கல்வியும் உலகியலறிவும் சொல்வன்மையுந் தோன்ற விளக்கியுரைத்தல். 'வெளியார்' வெள்ளியார் என்பதன் தொகுத்தல். அறிவில்லாதவரை வெளியார் என்றது, வயிரமில்லாத மரத்தை வெள்ளை யென்றும் வெளிறென்றும் சொல்லும் வழக்குப்பற்றி. அறிஞருக்கு அறிவு விளங்கித் தோன்றுவதுபோல் அறிவிலி கட்கு அறியாமையே விளங்கித் தோன்றுமாதலின், 'வான்சுதை வண்ணங் கொளல்' என்றார். அறியாமையின் இழிவுபற்றிக் கருத்துப்பொருள் வெண்மையைக் காட்சிப்பொருள் வெண்மையோ டிணைத்துக் கூறினார். அறிவிலி கட்கு அறிவிலியாகுக என்பது, சிறுபிள்ளைகட்குச் சிறுபிள்ளையாகுக் என்பது போன்றதாம்.

715. நன்றென்ற வற்றுள்ளு நன்றே முதுவருண்
முந்து கிளவாச் செறிவு.

(இ-ரை.) முதுவருள் முந்து கிளவாச் செறிவு - அறிவால் தம்மினும் மிக்கோ ரவையின்கண் அவரினும் முற்பட்டு ஒன்றைச் சொல்லாதிருக்கும் அடக்கம்; நன்று என்றவற்றுள்ளும் நன்றே அவையிற் பேசுவார்க்கு நல்லதென்று சொல்லப்பட்ட குணங்க ளெல்லாவற்றுள்ளும் நல்லதே.

முதுவரின் அறிவுமிகையும் தம் அறிவுக் குறைவும், முந்துகிளத்தலால் நேரும் அடக்கமின்மையும் வழுப்படலுமாகிய இருமடிக் குற்றமும், முந்து கிளவாமையா லுண்டாகும் அடக்கமும் வழுப்படாமையும் ஆகிய இருமடி நன்மையும், எண்ணியடங்கும் அடக்கம் அறிவோடு கூடியதாதலின், அதை நன்றென்ற வற்றுள்ளும் நன்றே' என்றார். முன்கிளத்தலை விலக்கியமையாலும், உடன் கிளத்தல் அவையோர்க்குப் பயன்படாமையுஞ் சேர்ந்து மும்மடிக் குற்றந் தங்குமாதலாலும், பின் கிளத்தலே, அதுவும் அவையோர்க்குப் பயன்படினே, நன்றாகும் என்பதாம். ஏகாரம் தேற்றம்.

716. ஆற்றி னிலைதளர்ந் தற்றே வியன்புல
மேற்றுணர்வார் முன்ன ரிழுக்கு.

(இ-ரை.) வியன் புலம் ஏற்று உணர்வார் முன்னர் இழுக்கு - பரந்த நூற் பொருள்களை உள்ளத்திற் கொண்டு அவற்றின் உண்மையை உணரும் உயர்ந்த அறிஞரவையில் வல்லானொருவன் வழுப்படல்; ஆற்றின் நிலை