பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 3.pdf/62

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

52

திருக்குறள்

தமிழ் மரபுரை


தொழிலாகுபெயர். அளவைநூல் தருக்கநூலென்றும் ஏரணநூலென்றும் பெயர்பெறும். அது சிறப்பு (வைசேடிகம்), முறை(நியாயம்) என இருதிறப்படும். இவையிரண்டும், முறையே கணாத முனிவராலும் அக்கபாத ரென்னும் கோதம முனிவராலும் இயற்றப்பட்ட ஆரிய முதனூல்களாக இன்று சொல்லப்படினும், இவற்றுள் முன்னது தமிழர் கண்டதென்றும், அது ஏரணம் என்றே பெயர் பெறுமென்றும், பின்னரே அதன் வழிப்பட்ட ஆரிய நூலென்றும் அறிதல் வேண்டும். சிறப்பென்னும் வைசேடிகத்திற்குத் தமிழ் ஏரணமே முதனூலென்பதை, அகத்தியத் தருக்க நூற்பாக்களை நோக்கிக் காண்க. அறிந்து கற்றலாவது, நேர்நெறிப்பட்ட தருக்க உறழ்களோடு (வாதங்களோடு), கோணைநெறிப்பட்ட விசியுழி (செற்பம்), ஒட்டாரம் (விதண்டை), திரிப்பு(சலம்) முதலிய உறழ்களையும் ஆந்தறிதல். இவ் விருகுறளாலும் அவை யஞ்சாதார் செ-யவேண்டிய செயல் கூறப்பட்டது.

726. வாளொடென் வன்கண்ண ரல்லார்க்கு நூலொடெ
னுண்ணவை யஞ்சு பவர்க்கு.

(இ-ரை.) வன்கண்ணர் அல்லார்க்கு வாளொடு என் - மறமுடையா ரல்லாதார்க்கு வாளோடு என்ன தொடர்புண்டு? நுண் அவை அஞ்சுபவர்க்கு நூலொடு என் - அதுபோல, நுண்ணறிஞரவைக்கு அஞ்சுவார்க்கு நூலோடு என்ன தொடர்புண்டு?

"எடுத்த யொழியினஞ் செப்பலு முரித்தே”

(சொல்.கிளவி.61)

என்று தொல்காப்பியமும்,

"ஒருமொழி மொழிதன் னினங்கொளற் குரித்தே”

(பொது.7)

என்று நன்னூலும் கூறியவாறு, வாள் என்பது வில் வேல் முதலிய பிற படைக்கலங்களையுந் தழுவும். 'என்' என்னும் வினா ஈரிடத்தும் எதிர்மறை விடையை அவாவி நின்றது. நுண்ணிய அறிஞர் கூட்டம் நுண்ணவை. இதில் வந்துள்ளது எடுத்துக்காட்டுவமை அணி.

"அவையஞ்சி மெ-விதிர்ப்பார் கல்வியுங் கல்லார்
அவையஞ்சா வாகுலச் சொல்லும் - நவையஞ்சி
ஈத்துண்ணார் செல்வமும் நல்கூர்ந்தா ரின்னலமும்

பூத்தலிற் பூவாமை நன்று”

(6)

என்பது நீதிநெறி விளக்கம்.