பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 3.pdf/70

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

60

திருக்குறள்

தமிழ் மரபுரை


புரையுங் கூறினார் பரிமேலழகர். தேடி வருந்தாமல் தானே வந்தடையுஞ் செல்வமுள்ள நாடு இவ் வுலகில் எங்குமின்மையாலும், இயற்கை விளை பொருளையும் விளையுமிடஞ் சென்று தொகுக்கவேண்டி யிருப்பதனாலும், மெ-வருத்தமில்லா வாழ்வு சோம்பலையும் நோயையும் விளைக்குமாதலாலும், அது உரையன்மை யறிக. "பாடில்லாற் பயனில்லை" என்னும் பழமொழியையும்,

"வேளாண்மை செ-து விருந்தோம்பி வெஞ்சமத்து
வாளாண்மையாலும் வலியரா-த்- தாளாண்மை
தாழ்க்கு மடிகோ ளிலரா-வருந்தாதார்

வாழ்க்கை திருந்துத லின்று”

(பழ. 151)

என்னும் பழமொழிச் செ-யுளையும் நோக்குக.

740. ஆங்கமை வெ-தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு.

(இ-ரை.) வேந்து அமைவு இல்லாத நாடு - அரசனோடு பொருந்துதலில்லாத நாடு; ஆங்கு அமைவு எ-தியக்கண்ணும் பயம் இன்றே - மேற் கூறியவாறு எல்லா நலங்களும் அமைந்திருந்ததாயினும் அவற்றாற் பயனில்லாததே யாகும்.

வேந்தமைவு' என்பது குடிகள் அரசனொடு பொருந்துதலும் அரசன் குடிகளொடு பொருந்துதலுமாகிய இருதலை யன்பையுங் குறிக்கும். இனி, 'வேந்தமை வில்லாத' என்பதற்கு நல்லரசன் வா-த்தலில்லாத என்றுரைப் பினுமாம். தந்தைக்கும் மக்கட்கும் நேர்த்தமில்லாத குடும்பம் கெடுவது போல, அரசனுக்கும் குடிகட்கும் நேர்த்தமில்லாத நாடு கெடும் என்பது கருத்து. இவ் விரு குறள்களாலும் நாட்டின் குற்றங் கூறப்பட்டது. உம்மை உயர்வுசிறப்பு. ஏகாரம் தேற்றம்.

உறுப்பியலில் நாட்டுப்பகுதி முற்றிற்று.

அதி. 75 - அரண்

அதாவது, பகைவராற் கைப்பற்றப்படாவாறும் கொள்ளையடிக்கப் படாவாறும் அழிக்கப்படாவாறும், நாட்டிற்கும் தலைவருக்கும் அரசனுக்கும் பாதுகாப்பளிக்கும் இயற்கையும் செயற்கையுமாகிய இருவகையமைப்பு. இது நாட்டின் சிறந்த வுறுப்புகளுள் ஒன்றாதலாலும், 'வல்லரணும் நாட்டிற் குறுப்பு'