பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 3.pdf/71

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

என்ற முந்தின அதிகாரத்தில் தோற்றுவா- செ-யப்பட்டதினாலும், நாட்டின் பின் வைக்கப்பட்டது.

741. ஆற்று பவர்க்கு மரண்பொரு ளஞ்சித்தற்
போற்று பவர்க்கும் பொருள்.

(இ-ரை.) அரண் - இருவகைப்பட்ட பாதுகாப்பமைப்பு; ஆற்றுபவர்க்கும் பொருள் - மூவகை யாற்றலு முடையரா-ப் பிறர் நாட்டின்மேற் படையெடுத்துச் சென்று போர் செ-வார்க்கும் சிறந்த செல்வம்; அஞ்சித் தற்போற்றுபவர்க்கும் பொருள் - அவ் வாற்றலின்றித் தம் பகைவர்க்கஞ்சித் தற்காப்புச் செ-வார்க்கும் சிறந்த செல்வம்.

மூவகையாற்றல் அறிவு, ஆண்மை, கருவி என்பன. அவற்றுட் கருவி படை, படைக்கலம், பொருள் என முத்திறப்படுவது. ஆற்றலுள்ளவர் பிறர் மேற் சென்றவிடத்து, அவர் கருவூலத்தையும் மகளிரையும் காத்தற்கு அரண்வேண்டியிருத்தலானும்; ஆற்றலில்லாதவர் வேட்டைநாயால் துரத்தப் பட்ட முயல் குழிக்குட் புகுந்து தப்புவதுபோல், தம் பகைவர்க்குத் தப்பிப் பதுங்குவதற்கு அரண் இன்றியமையாததாதலாலும்; தாக்குவார்க்கும் தற்காப் பார்க்கும் ஒப்ப 'அரண் பொருள்' என்றார். வலியார்க்கும் அரண் வேண்டி யிருத்தலை யுணர்த்த அவரை முற்கூறினார். ஆயினும், பத்தினித்தெ-வத் திற்குப் படிமைக்கல் எடுக்கவும் கனகவிசயரின் செருக்கடக்கவும், வடநாடு சென்ற சேரன் செங்குட்டுவன் முப்பத்திரு மாதம் நீங்கியிருந்தும், தென் னாட்டிற் குழப்பமில்லா திருந்தமை, அவனது அனைத்திந்தியத் தலைமை யையே உணர்த்தும். உம்மையிரண்டுள் முன்னது உயர்வுசிறப்பு; பின்னது இறந்தது தழுவிய எச்சம்.

742. மணிநீரு மண்ணு மலையு மணிநிழற்
காடு முடைய தரண்.

(இ-ரை.) மணிநீரும் - (மதிலை யடுத்த) நீலமணிபோலும் நிறத்தை யுடைய அகழிநீரும்; மண்ணும் - அதனையடுத்த வெறுநிலமும்; அணிநிழல் காடும் - அதனையடுத்த குளிர்ந்த நிழலுள்ள அழகிய காடும்; மலையும் அதனையடுத்த பல நீள்மலையும் உடையது; அரண் - தனக்கு முன்னாக முறையே உடையதே சிறந்த மதிலரணாவது.

மதிலரண், நீரரண், காட்டரண், மலையரண் என அரண் நால்வகையாகச் சொல்லப்படினும், இங்கு ஆசிரியர் சிறப்பாக அரணென்று எடுத்துக்