பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 3.pdf/73

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

"அன்னமு மகன்றிலு மணிந்து தாமரைப்
பன்மலர்க் கிடங்குசூழ் பசும்பொற் பாம்புரிக்
கன்னிமூ தெயில்கட லுடுத்த காரிகை

பொன்னணிந் திருந்தெனப் பொலிந்து தோன்றுமே"

(சீவக.1250)

என்பதனாலும் அறிக. இதனால் "மதிற்புறத்து மருநிலம் பகைவர் அரண் பற்றாமைப் பொருட்டு" என்னும் பரிமேலழகர் கூற்றுப் பொருந்தாமை காண்க. பாம்புரி மதிலைச் சுற்றியமைந்த படிக்கட்டு.

'உயர்வு' அமைந்தது மரவேணியும் நூலேணியுங்கொண்டு ஏறமுடியாத மதில். இது உவளகம் (உவணகம்) எனப்படும். உவள் = உவண் (உயர்ச்சி).

"வன்சிறை யுவளகம் ஆரையும் வரையார்" (திவா. 5) 'அகலம்' அமைந்தது உழிஞையார் துளைக்க முடியாத அடியகலமும் நொச்சியார் நின்று அம்பெ-யக்கூடிய தலையகலமு முள்ள மதில். இது எயில் (எ-இல்) எனப் படும். 'திண்மை' அமைந்தது செம்பையுருக்கிச் சாந்தாக வார்த்துக் கருங் கல்லாற் கட்டிய மதில்.

இது இஞ்சி எனப்படும். இஞ்சுதல் இறுகுதல்.

"செம்புபுனைந் தியற்றிய சேணெடும் புரிசை"

(புறம்.205)

"செம்பிட்டுச் செ-த விஞ்சித் திருநகர்ச் செல்வம் தேறி”

(கம்பரா. கும்ப. 160)

'அருமை' அமைந்தது பல்வகைப் பொறிகள் கொண்டதா-ப் பகைவர் அணுகமுடியாத மதில். இது சோ எனப்படும்.

"சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த"

(சிலப்.17:35)

மதிற்பொறிகளாவன:

"... வளைவிற் பொறியும்
கருவிர லூகமும் கல்லுமிழ் கவணும்
பரிவுறு வெந்நெயும் பாகடு குழிசியும்
கா-பொன் னுலையும் கல்லிடு கூடையும்
தூண்டிலும் தொடக்கும் ஆண்டலை யடுப்பும்
கவையும் கழுவும் புதையும் புழையும்
ஐயவித் துலாமும் கைபெய ரூசியும்
சென்றெறி சிரலும் பன்றியும் பணையும்