பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 3.pdf/74

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

64

திருக்குறள்

தமிழ் மரபுரை


எழுவுஞ் சீப்பும் முழுவிறற் கணையமும்
கோலும் குந்தமும் வேலும் பிறவும்."

(சிலப்.15:207-16)

இவற்றுள் 'பிற' என்றவை நூற்றுவரைக் கொல்லி, தள்ளிவெட்டி, களிற்றுப் பொறி, விழுங்கும் பாம்பு, கழுகுபொறி, புலிப்பொறி, குடப்பாம்பு, சகடப் பொறி, தகர்ப்பொறி, 'அரிநூற் பொறி முதலியன (மேற்படி உரை). 'அமைவு' ஆகுபெயர். நூலோர் செயல் நூலின்மேல் ஏற்றிக் கூறப்பட்டது.

744. சிறுகாப்பிற் பேரிடத்த தாகி யுறுபகை
யூக்க மழிப்ப தரண்.

(இ-ரை.) சிறு காப்பின் பெரு இடத்தது ஆகி - காவல் செ-ய வேண்டிய இடம் சிறிதா-, வாழ்தற்கேற்ற உள்ளிடம் அகன்றதா-; உறுபகை ஊக்கம் அழிப்பது - தன்னை வந்து முற்றுகையிட்ட பகைவரின் மனவெழுச்சியைக் கெடுப்பதே; அரண் - சிறந்த கோட்டை யரணாவது.

நாற்புறத்து வாயில்கள் தவிர, மற்ற இடமெல்லாம் தகர்க்க முடியாத திண்ணிய மதிலாகவும் அணுகமுடியாத பொறிகளேற்றப்பட்டதாகவும் இருத்தலின், 'சிறு காப்பின்' என்றும்; அரசனும் படையும் நகர மக்களும் ஏந்தாக (வசதியாக) வாழ்தற்கேற்ப அகன்றிருத்தல்பற்றிப் 'பேரிடத்த தாகி' என்றும், தம் ஆற்றலும் ஊக்கமும் நோக்கி, இன்றே யழித்துவிடுவோம் என்னும் பூட்கை மறத்துடன் வந்த பகைவர், மதிலைக் கண்டவுடன் ஊக்கமழிதலின் ஊக்கம் அழிப்பது' என்றும் கூறினார். பேரிடத்தைக் கோட்டை யுள்ளிடம் என்று கொள்ளாது நாடுமுழுதுமென்று கொண்டு, "வாயிலும் வழியுமொழிந்த விடங்கள் மலை, காடு, நீர்நிலை யென்றிவற்றுள் ஏற்பன வுடைத்தாதல்பற்றிச் 'சிறுகாப்பின்' என்று கூறியதாக வுரைத்தார் பரிமேலழகர். முதலிரு குறள்கள் தவிரப் பிறவெல்லாம் மதிலரணைப்பற்றியே சிறப்பாகக் கூறுவதைக் கூர்ந்து நோக்கிக் காண்க. அகழி மதிலைச் சேர்ந்திருப்பதனால், அது மதிலொடு சேர்த்தே கருதப்பெறும்.

745. கொளற்கரிதா-க் கொண்டகூழ்த் தாகி யகத்தார்
நிலைக்கெளிதா நீர தரண்.

(இ-ரை.) கொளற்கு அரிதா - உழிஞையாராற் கைப்பற்றுவதற்கு அரிதா-; கொண்ட கூழ்த்து ஆகி - உள்ளிருப்பார்க்கு வேண்டிய பலவகை நுகர்ச்சிப் பொருள்களையும் உடையதா-; அகத்தார் நிலைக்கு எளிது