பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 3.pdf/76

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

66

திருக்குறள்

தமிழ் மரபுரை


அவர்க்கு வேண்டியவரை விடுத்துப் பெரும் பொருள் கொடுத்து வயப் படுத்திக் கோட்டை வாயிலைத் திறக்கச் செ-தும்; பற்றற்கு அரியது - உழிஞை யாராற் கைப்பற்ற முடியாததே; அரண் - சிறந்த கோட்டை யரணாவது.

இம் மூன்று போர் வலக்காரங்களுள்ளும், முதலது மதிற்சிறப்பாலும், இரண்டாவது நல்லாளாலும், மூன்றாவது அதிகாரிகளின் நேர்மையாலும், வாயாவாம். அறைப்படுத்தலெனினும் அறைபோக்குதலெனினும் கீழறுத்தலெனினும் ஒன்றே. கையூட்டாற் காட்டிக் கொடுக்கச் செ-தல் என்பது இவற்றின் பொருள்.

748. முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்
பற்றியார் வெல்வ தரண்.

(இ-ரை.) முற்று ஆற்றி முற்றியவரையும் - படைப்பெருமையால் வளைதல் வல்லவரா - வந்து வளைந்த உழிஞையாரையும்; பற்றியார் பற்று ஆற்றி வெல்வது - மதிலரணைப் பற்றிநின்ற நொச்சியார் சிறுபடையினராயினும் தாம் பற்றிய விடத்தைவிட்டு அகலாது நின்று பொருது வெல்வதற்கு இடமானதே: அரண் - சிறந்த கோட்டையரணாம்.

முற்றியவரையும் என்னும் சிறப்பும்மையால் படைப்பெருமை பெறப் பட்டது. அதனால், அதற்கு மறுதலையாகச் சிறிய படையினராயினும் என்பது வருவித்துரைக்கப்பட்டது. ஒரு மாநகர் முழுவதையும் வளைதற்கு மாபெரும் படை வேண்டும். பற்றாற்றுதல் பற்றியவிடத்தில் நின்று பொருதல்; இடவேற்றுமைத்தொகை. 'பற்று' ஆகுபெயர். அரண் சிறப்பால் சிறுபடையும் பெரும்படையை வெல்லும் என்பது கருத்து.

"நிலனும் பொருளுங் காலமுங் கருவியும்
வினைமுதற் கிளவியும் வினையு முளப்பட
வவ்வறு பொருட்குமோ ரன்ன வுரிமைய

செ-யுஞ் செ-த வென்னுஞ் சொல்லே"

(சொல்.37)

என்னும் தொல்காப்பிய நெறிமொழிப்படியும் உலக வழக்குப்படியும், பெயரெச்சம் இடத்தையும் தழுவுமாதலால், "வெல்வதென உடையார் தொழில் அரண்மேனின்றது" என்று கொள்ளத் தேவையில்லை. வெல்லும் அது - வெல்லுமது - வெல்லுவது - வெல்வது. இவ் வெழுகுறளாலும் நல்லரணின் இலக்கணங் கூறப்பட்டது.