பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 3.pdf/87

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

தீங்கு நேரும்; நாகம் உயிர்ப்பக் கெடும் - அப் பாம்பு மூச்சுவிட்ட அளவிலேயே அப் பகை ஒருங்கே அழிந்துபோம்.

மறங்குன்றிய பகைவர் பலர் திரண்டு முழக்கஞ் செ-தாலும் மறமிஞ்சியவன் அஞ்சான். அவன் கிளர்ந்தெழுந்த துணையானே அவர் கெட்டொழிவர் என்பதுபட நின்றமையின், இது பிறிதுமொழிதலணியாம். தொல்படையுள்ளும் பெருமறவன் சிறந்தவன் என்பது கருத்து. உவரி யொலித்தக்கால் உவமைத் தொகை. உவரி யொலித்தல் என்னும் வினை யுவமத்தால் திரட்சி பெறப்பட்டது. பெருமறவனுக்குப் பெருஞ்சிறப்புச் செ-க என்பது குறிப்பு.

764. அழிவின் றறைபோகா தாகி வழிவந்த
வன்க ணதுவே படை.

(இ-ரை.) அழிவு இன்று - போரின்கண் தோல்வியடைதலின்றி; அறை போகா தாகி - பகைவரால் எங்ஙனமுங் கீழறுக்கப்படாததா; வழிவந்த வன்கணதுவே - தொன்றுதொட்டுத் தலைமுறை தலைமுறையாக வளர்ந்து வந்த வன்மறத்தை யுடையதே; படை - சிறந்த படையாவது.

மறவலிமையால் அழிவின்மையும் அரசன்மீதன்பும் நாட்டுப் பற்றும் தன்மானமும், உயர்ந்த வொழுக்கமுடைமையால் அறைபோகாமையும் விளைந்தன.

"கெடுக சிந்தை கடிதிவள் துணிவே
மூதின் மகளி ராதல் தகுமே
மேனா ளுற்ற செருவிற்கிவ டன்னை
யானை யெறிந்து களத்தொழிந் தனனே
நெருந லுற்ற செருவிற்கிவள் கொழுநன்
பெருநிரை விலங்கி யாண்டுப்பட் டனனே
இன்றும், செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி
வேல்கைக் கொடுத்து வெளிதுவிரித் துடீஇப்
பாறுமயிர்க் குடுமி யெண்ணெ- நீவி
யொருமக னல்ல தில்லோள்

செருமுக நோக்கிச் செல்கென விடுமே"

(புறம்.279)

என்னும் புறப்பாட்டும்,