பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 3.pdf/88

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

78

திருக்குறள்

தமிழ் மரபுரை


"கன்னின்றா னெந்தை கணவன் களப்பட்டான்
முன்னின்று மொ-யவிந்தா ரென்னையர் - பின்னின்று
கைபோ-க் கணையுதைப்பக் காவலன் மேலோடி

யெ-போற் கிடந்தானென் னேறு”

(பு.வெ. 8:22)

என்னும் புறப்பொருள் வெண்பாமாலைச் செ-யுளும், வழிவந்த வன்கண்மைத் திறத்தை விளக்கும். அது என்னும் சுட்டுப்பெயர் ஈறான பின்பும் தனித்து நின்றதுபோல் வகரவுடம்படுமெ-பெற்றது.

765. கூற்றுடன்று மேல்வரினுங் கூடி யெதிர்நிற்கு
மாற்ற லதுவே படை.

(இ-ரை.) கூற்று உடன்று மேல் வரினும் - இறப்புத் தெ-வமாகிய கூற்று வனே சினந்து வந்து தாக்கினும்; கூடி எதிர் நிற்கும் ஆற்றலதுவே - கலை யாது எதிர்த்து நின்று பொரும் வலிமையுடையதே; படை - சிறந்த படையாவது.

"எப்போ தாயினுங் கூற்றுவன் வருவான்
அப்போ தந்தக் கூற்றுவன் தன்னைப்
போற்றவும் போகான் பொருளொடும் போகான்
சாற்றவும் போகான் தமரொடும் போகான்
நல்லா ரென்னான் நல்குர வறியான்
தீயா ரென்னான் செல்வரென் றுன்னான்

தரியா னொருகணந் தறுக ணாளன்"

(கபி.அக.35-41)

ஆதலின், உம்மை உயர்வுசிறப்பு, சாவின் ஆட்படுத்தமே (personification) கூற்றுவனாயினும், அத்தகைய சிறுதேவன் உண்டென்பதும், அவன் கடவுட்கு அடுத்தபடியாக மறம் நிறைந்தவன் என்பதும், பல பழ மதங்களின் பொதுக் கருத்தாம். ஆற்றல் உடல்வலியும் உளவலியும்.

766. மறமான மாண்ட வழிச்செலவு தேற்ற
மெனநான்கே யேமம் படைக்கு.

(இ-ரை.) மறம் மானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் என நான்கே - தறுகண்மை, தன்மானம், பண்டை வயவர் (வீரர்) ஒழுகிய நல்வழியில் ஒழுகுதல், அரசனால் நம்பப்படுதல் ஆகிய நான்கே; படைக்கு ஏமம் - படைக்கு அரணான பண்புகளாம்.