பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ்நாட்டு அரசின் கடமை

97

ஆயின், அதே சமையத்தில், இருபாலியற்கை வேறு பாட்டையும் இந்தியப் பண்பாட்டையும் நோக்குதல் வேண்டும்.

அச்சம் மடம் (அறிமடம்) நாணம் பயிர்ப்பு என்பன பெண்பாற் குணம் என்பது, தமிழர் கொள்கை. பெண்டிர் மெல்லியலார் (Weaker sex) என்பது வியனுலகக் கொள்கை. ஆதலால், மேனாடுகளிலும் பெண்டிர் படைத்துறையிற் சேரார், சேர்க்கப்படார்.

மக்கட்டொகை மிகையாற் கல்விகற்ற ஆடவர்க்கு வேலை யில்லாதபோது பெண்டிர்க்குச் சமவுரிமையாக வேலை யளிப்பது பொருந்தாது.

வேலையென்பது, வீட்டுவேலை வெளிவேலை என இருவகை. சமையல் செய்தல், வீடு துப்புரவாக்கல், வீட்டார்க் கும் விருந்தினர்க்கும் அமுதுபடைத்தல், பிள்ளை பெற்று வளர்த்தல் ஆகிய வீட்டு வேலைகள் பெண்டிர்க்கே யுரியன என்பது வெளிப்படை. வேலைக்காரி வீட்டு வேலையெல்லாவற் றையுஞ் செய்ய வியலாது. அவளுங் கற்றவளாயிருப்பின், அவளுங் கல்விப்பணியை விரும்பலாம்.

வெளிவேலை யென்பது, பெரும்பாலும் வீட்டிற்கு வெளியும் சிறுபான்மை உள்ளும் ஏதேனுமொரு பணிசெய்து, தன் மனைவியும் மக்களுமான குடும்பத்திற்கு வேண்டிய பொருள்தேடல். இதற்கு ஆடவரே சிறந்தவர் என்பது வெளிப்

படை.

66

'மனைக்கு விளக்கம் மடவார் "வினையே ஆடவர்க் குயிரே”

""

(IT GOT LO 600fl. 101)

இனி, பெண்டிர் கல்விகற்றலாற் பயனென்னை யெனின், சிறப்பாக இல்லறம் நடத்துதலும், பிள்ளைகளைச் செவ்வை யாய் வளர்த்து அறிவூட்டலும் என்க.

கல்விகற்ற பெண்டிரெல்லாம் கல்விப் பணியே செய்ய வேண்டும் என்னும் யாப்புறவில்லை. கணவன் சம்பளம் குடும்ப வாழ்க்கைக்குப் போதாதெனின், அதைப் போதிய அளவு உயர்த்துவது அரசின் கடமையாதலால், அதற்கே கிளர்ச்சி செய்தல் வேண்டும்.

களைகண்(ஆதரவு) இல்லாத கன்னிப்பெண்ணும் கைம் பெண்ணும் எங்ஙனம் பிழைப்பதெனின், அத்தகை யோர்க்கே கல்விப்பணி கட்டாயமாகத் தரல் வேண்டும் என அறிக. துவக்கப்