பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ்நாட்டு அரசின் கடமை

நன்னீ ராடி நல்லுடை யணிந்து கல்வி தேர்ந்த கனம்பதம் பெற்று நாக ரிகத்தின் நன்கனம் வாழும்

நெல்லைச் சிவவூண் வெள்ளாண் குலவனும் பிறப்பி லிழிந்தோன் பெயரிற் சூத்திரன்'

C

இறக்குந் துணையும் இழிவின் நீங்கான் இருமுறை குளிக்கினும் இவன்துப் புரவிலன் இவன்கை யுண்ணல் இழிவென் றதன்மேல் கல்வி நிரம்பாக் கரியவ னேனும்

இருகை யேந்தி யிரப்பவ னேனும்

அருந்தமி ழறியா அயலா னேனும்

குலப்பெயர் ஒன்றைக் கூறின் தெய்வமாக் கொள்வான் விழுவான் கும்மிட் டெழுவான் அவனொரு தேவன் அருளிமண் வந்தோன் வழங்கா தெவர்க்கும் விளங்கா தெனினும் அவன்வாய் மொழியே ஆகுக வழிபட அவன்கை பட்டது அழுதே யிங்ஙனம் இனியெந் நாளும் இருக்க எனுமே.

1. குலப்பட்ட நீக்கம்

குலவொழிப்பு வழிகள்

107

பெயர்கள். மாணவர் சேர்ப்புப் படிவங்கள், அரசினர் பதிவேடுகள் முதலியவற்றிற் குலப்பட்டங்களை நீக்குதல் வேண்டும்.

குடியரசு தலைவர் உம்பர் மன்றத் (Supreme Court) தலைமைத் தீர்ப்பாளர் (Chief Justice), தலைமை மந்திரியார், பாராளுமன்றம் என்னும் நடுவணாளுமன்றத் தலைவர் இருவர் ஆகியோர் முதற்கண் தம் குலப்பட்டத்தை நீக்கிப் பிறர்க்கு வழிகாட்டல் வேண்டும். பின்னர் ஒவ்வோர் உறுப்பு நாட்டிலும் அவரை யொத்த தலைமையதிகாரிகள் அவரைப் பின்பற்றலாம்.

ஆயினும், தமிழ்நாடு மூத்த நாடாதலாலும், திருவள்ளுவர் தோன்றி வாழ்ந்த நாடாதலாலும், இவ்வகையில் தானே ஏனை நாடுகட்கு வழிகாட்டலாம்.

2. தகுதிபற்றிக் கல்வியும் வேலையும்

மாணவர் சேர்ப்பிலும் வேலையமர்த்தத்திலும், தாழ்த்தப் பட்டவர்க்கு இன்னும் பத்தாண்டு கூட்டக்கூடிய சிறப்புச் சலுகை